ஓடிடி ரிலீஸில் வாழையை வச்சி செய்த ரசிகர்கள்!. மெய்யழகனுக்கும் அதே அடிதானா?!.. காத்திருப்போம்!..
Meiyazhagan: ஒரு படத்தின் வசூல் என்பது அப்படத்தை பார்த்தவர்கள் வெளியே என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்துதான். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் சில நாட்கள் ரசிகர்களால் படம் ஓடும். ஆனால், அது 3 நாட்கள் மட்டுமே. படம் வசூலை அள்ள வேண்டும் எனில் பொதுவான ரசிகர்களுக்கு படம் பிடிக்க வேண்டும்.
அப்படி பிடிக்கவில்லை எனில் படம் எதிர்பார்த்த வசூலை பெறாது. அஜித்தின் விவேகம், ரஜினியின் தர்பார், அண்ணாத்த, விஜயின் வாரிசு போன்ற படங்கள் அதிக வசூலை பெறாமல் போனதற்கு காரணம் அதுதான். ரஜினியின் ஜெயிலர் படமும், கமலின் விக்ரம் படமும் நன்றாக ஓடி வசூலை அள்ளியதற்கு காரணம் பொதுவான ரசிகர்கள் அப்படத்தை பார்க்க தியேட்டருக்கு போனார்கள் என்பதால்தான்.
படங்கள் பார்ப்பதில் இருவகையான ரசிகர்கள் இருக்கிறார்கள். தியேட்டருக்கு சென்று பார்க்கும் ரசிகர்கள்.. ஓடிடியில் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என நினைக்கும் ரசிகர்கள்.. புதிய படங்கள் தியேட்டரில் ரிலீஸாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும். சில திரைப்படங்கள் தியேட்டரில் பெறாத வரவேற்பை ஓடிடியில் வெளியாகும்போது பெறும்.
சில நாட்களுக்கு முன்பு விமலின் நடிப்பில் வெளியான 'போகுமிடம் வெகுதூரமில்லை' படம் தியேட்டரில் ஓடவில்லை. ஆனால், ஓடிடியில் அந்த படம் நல்ல வரவேறபை பெற்று பலரும் பாராட்டியிருந்தார்கள். சில படங்கள் தியேட்டரில் ரிலீஸாகி நல்ல வசூலை பெறும். ஆனால், ஓடிடியில் வெளியாகும்போது பலரும் கழுவி ஊற்றுவார்கள்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் தியேட்டரில் நன்றாக ஓடியது. பலரும் பாராட்டி பேசிய வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. ஆனால், ஓடிடியில் வெளியான போது படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. பில்டப் செய்த அளவுக்கு இந்த படத்தில் ஒன்றுமில்லை என பலரும் சமூகவலைத்தளங்களில் சொன்னார்கள்.
இந்நிலையில், கார்த்தி நடித்து 96 பிரேம் இயக்கிய மெய்யழகன் படம் வருகிற 25ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படம் தியேட்டரில் வந்த போது ‘உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறப்பான ஒரு ஃபீல் குட் மூவி’ என பலரும் சொன்னார்கள். ஓடிடியில் வெளியாகும் போது படம் பாராட்டை பெறுமா?.. இல்லை கழுவி ஊற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.