மெய்யழகனுக்கு குறுக்க வந்த தேவரா!.. ஃபீல் குட் மூவி இப்படி ஆகிப்போச்சே!..

Meiyazhagan : 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம்தான் மெய்யழகன். 96 படம் எப்படி ஒரு ஃபீல் குட் படமாக அமைந்ததோ அது போலவே இந்த படமும் உறவுமுறைகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் ஒரு ஃபீல் குட் மூவியாக வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் கார்த்தியும், அரவிந்த்சாமியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

90 காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமபுறங்களில் இரண்டு உறவுகளுக்கு இடையில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை. இப்போதுள்ள இளைஞர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் 90களில் மக்கள் எப்படி இருந்தார்கள் என காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படத்தை பார்த்த பலரும் தஞ்சாவுருக்கே போய்விட்டது வந்தது போல இருக்கிறது என நெகிழ்ந்து சொன்னார்கள். மேலும், பல காட்சிகள் அழ வைத்துவிட்டதாக பலரும் சொன்னார்கள்.

devara

devara

ஒரே நேரத்தில் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிக்கல்கள் வரும். இதனால்தான் பெரிய நடிகர்கள் வரும்போது வேறு எந்த படங்களும் வராது. ஆனால், சில சமயம் தவிர்க்க முடியாமல் சில பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்துவிடும்.

மெய்யழகன் படம் வெளியான போது அதனுடன் தெலுங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆரின் தேவரா, சதீஷின் சட்டம் என் கையில், விஜய் ஆண்டனி நடித்த ஹிட்லர், பிரபுதேவாவின் பேட்ட ராப் ஆகிய படங்கள் வெளியானது. எனவே, இந்த எல்லா படங்களும் மொத்த தியேட்டர்களை பங்கு போட்டுக்கொண்டது.

27ம் தேதி ரிலீஸான நேரடி தமிழ் படங்களில் பெரிய நடிகர் கார்த்திதான். எனவே, தங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்த்து படக்குழு. ஆனால், தேவராவுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்லி பல பெரிய தியேட்டர்கள் மெய்யழகன் படத்துக்கு 2 காட்சிகள் மட்டுமே ஒதுக்குவோம் என சொல்ல, கடுப்பான மெய்யழகன் படக்குழு உங்களுக்கு படத்தையே கொடுக்க மாட்டோம் என சொல்ல, 240 தியேட்டர்களில் மட்டுமே மெய்யழகன் படம் வெளியாகியிருக்கிறது.

ஆனாலும், படத்திற்கு வரவேற்பு இருந்தால் தேவரா உள்ளிட்ட மற்ற படங்களின் காட்சி குறைக்கப்பட்டு மெய்யழகன் படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகிறது.

Related Articles
Next Story
Share it