இன்னொரு 96 ரெடி!. மனதை நெகிழ வைக்கும் மெய்யழகன் டிரெய்லர் வீடியோ.....
Meiyazhagan: 96 திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சி.பிரேம்குமார். இதற்கு முன் பல காதல் கதைகள் சினிமாவில் வந்திருந்தாலும் மிகவும் இயல்பாக பள்ளி பருவ காதலை காட்சிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் ஜானுவாக திரிஷாவும், ராமாக விஜய் சேதுபதியும் வாழ்ந்திருந்தார்கள்.
சிறு வயது ராமாகவும், ஜானுவாகவும் நடித்த நடிகர்களும் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தனர். பலருக்கும் இந்த படம் பள்ளி பருவ காதலை நினைவுப்படுத்தியது. இந்த படத்தின் வெற்றியால் திரிஷா அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கு, கன்னட மொழியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது அதே இயக்குனர் இயக்கியுள்ள திரைப்படம்தான் மெய்யழகன்.
இந்த படத்தில் அர்விந்த்சாமியும், கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வீடியோ வெளியானது. சிட்டியில் இருந்து கிராமத்திற்கு செல்லும் அர்விந்த்சாமியை அவரின் உறவினர் கார்த்தி எப்படி நடத்துகிறார்?. வெள்ளந்தியாக எப்படி பேசுகிறார்? என பல சுவாரஸ்யமான காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது.
அதோடு, படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அரவிந்த்சாமியும், கார்த்தியும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள். இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது.
இதில், கார்த்தி - அர்விந்த்சாமி இருவருக்கும் இடையே ஏற்படும் அழகிய உறவு, என்னவெல்லாம் செய்கிறார்கள்?.. அரவிந்த்சாமி எதைத்தேடி தனது சொந்த கிராமத்திற்கு போகிறார்? என பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும், மனதை வருடும் பல காட்சிகளும் இந்த டிரெய்லர் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.
டிரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக இன்னொரு 96 படமாக மெய்யழகன் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், அவ்வளவு அழகான, கவிதை போன்ற காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கிறது. மெய்யழகன் திரைப்படம் வருகிற 27ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.