Categories: Cinema News Review

கதையில மாஸ் இல்ல.. கதைதான் மாஸ்!. செம கூஸ்பம்ப்ஸ்!.. வேட்டையன் டிவிட்டர் விமர்சனம்..

Vettaiyan Review: ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி முக்கிய வேடத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் வேட்டையன். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார்.

வேட்டையன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் இப்படம் காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. ஆனால், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் சீக்கிரமாகவே திரையிடப்பட்டது. வெளிநாட்டுக்கும் இந்தியாவுக்கும் நேரம் வேறுபடும் என்பதால் படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் படம் எப்படி இருக்கு என பதிவிட்டுள்ளனர். அதோடு, சிறப்பு காட்சி பார்த்த ரசிகர்களும் தங்களின் கருத்தை சொல்லி வருகிறார்கள்.

கதையில் மாஸ் இல்லை.. கதைதான் மாஸ்.. படத்தின் முதல் 25 நிமிடம் செம கூஸ்பம்ப்ஸ். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ரஜினி அறிமுகமாகும் காட்சி அசத்தலாக இருக்கிறது. ரஜினி பல வருடங்களுக்கு பின் இன்வெஷ்டிகேஷன் திரில்லரில் ரஜினி நடித்திருக்கிறார்.

ஃபகத் பாசிலும், ரித்திகாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஃபகத் பாசில் வரும் காட்சிகள் செம ஃபன்னாக இருக்கிறது. படத்தின் திரைக்கதையும், டிவிஸ்ட்டுகளும் உங்களை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கண்டிப்பாக வேட்டையன் இன்டஸ்ட்ரி ஹிட். படத்தின் இடைவேளை காட்சியில் 2, 3 நிமிங்கள் தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

படத்தின் 2ம் பாதியும் சிறப்பாக இருக்கிறது. ஒருகட்டத்தில் படம் தலைவர் ரஜினியின் படமாக மாறுகிறது. அவரின் ஸ்டைல், வசனங்கள், அவர் யோசிக்கும் விதம் எல்லாமே அசத்தலாக இருக்கிறது. அமிதாப்பச்சனுக்கு வித்தியாசமான வேடம். இதற்கு முன் அவரை இப்படி பார்த்தது இல்லை.

முதல் பாதியில் மஞ்சு வாரியருக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் அவர் ஸ்கோர் செய்கிறார். படத்தின் கிளைமேக்ஸ் இந்தியன் சினிமா வரலாற்றில் இதுவரை பார்க்காதது. கண்டிப்பாக சினிமாவில் இது மாற்றத்தை ஏற்படுத்தும். ரஜினி, ஞானவேலை தவிர வேறு யாரும் இப்படி ஒரு கதையை கமர்ஷியலாக கொடுத்திருக்க முடியாது என பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

வேட்டையன் படத்திற்கு வரும் விமர்சனங்களை பார்க்கும்போது ஜெயிலருக்கு பின் ரஜினிக்கு கண்டிப்பாக இப்படம் ஒரு மாஸ் ஹிட் படமாக அமையும் என நம்பலாம்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்