பல வருஷத்துக்கு முன்பே ரஜினியும் கமலும் போட்டுக்கொண்ட அக்ரிமெண்ட்!.. செம மேட்டரா இருக்கே!..

Rajini kamal: எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு பின் திரையுலகில் முக்கிய நடிகர்களாக மாறியவர்கள் ரஜினி - கமல் என்பது எல்லோருக்கும் தெரியும். கமல் ரஜினிக்கு பல வருடங்கள் சீனியர். 5 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர். டீன் ஏஜை எட்டிய போது சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

அதன்பின் என்ன ஆவது என அவருக்கே குழப்பமாக இருந்ததாம். இறுதியில் நடன இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார். நடிகர், நடிகைகளுக்கு எப்படி நடனமாட வேண்டும் என சொல்லி கொடுப்பதுதான் கமலின் வேலை. அப்படி ஒரு படப்பிடிப்பில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ஜெமினி கணேசன் கமலை அழைத்துக்கொண்டு போய் பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்து வைத்து நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

அப்படி தொடர்ந்து பாலச்சந்தரின் படங்களில் கமல் நடிக்க துவங்க, அப்படி அவர் நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வந்தவர்தான் ரஜினி. அந்த படத்திலிருந்துதான் ரஜினி - கமல் நட்பு துவங்கியது. கமல் சீனியர் என்பதால் அவர் மீது எப்போதும் ரஜினிக்கு ஒரு மரியாதை உண்டு. அது இப்போது வரை நீடிக்கிறது.

rajini kamal

திரையுலகில் நீண்ட வருட நட்பு என்பது சாத்தியமே இல்லை. ஏனெனில் ஒருவரின் காலை இழுத்து கீழே தள்ளிவிட்டு மேலே ஏறவே பலரும் முயற்சி செய்வார்கள். பொய்களும், பொறாமைகளும், சூதும் நிறைந்த உலகம் இது. ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். இல்லாத ஒன்றை சொல்லி இரண்டு நடிகர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துவார்கள்.

இது சினிமாவில் எப்போதும் நடக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி ரஜினி - கமல் இப்போதும் நல்ல நட்பில் இருப்பதற்கு காரணம் அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே எடுத்த ஒரு முடிவுதான். ரஜினி, கமலும் தனித்தனியாக படங்களில் நடிப்பது என முடிவானதும் ரஜினியிடம் கமல் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

உங்களுக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதை செய்ய பலரும் முயற்சி செய்வார்கள். நீங்கள் சொல்லாத ஒன்றை சொல்லியதாக என்னிடம் சொல்வார்கள். என்னைப் பற்றி உங்களிடம் பேசுவார்கள். எதுவாக இருந்தாலும் நாம் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். நாமாக ஒரு முடிவை எடுக்கக் கூடாது’ என சொல்லி இருக்கிறார். இப்போது வரை இருவரும் அதை பின்பற்றி வருகிறார்கள்.

Related Articles
Next Story
Share it