மனசிலாயோ பாத்துட்டு ரஜினி சொன்ன விஷயம்! அவர் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

இப்போது இணையத்தில் பெரும் டிரெண்டிங்காகி வருவது மனசிலாயோ பாடல்தான். பாடல் வெளியானதில் இருந்து அந்த பாடலுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் ரீல்ஸ்களை அள்ளி தெறிக்க விடுகின்றனர். சினிமாவில் இந்த பாடலுக்குத்தான் அதிக ரீல்ஸ்கள் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. வழக்கம் போல ரஜினியின் குடும்பம் கலந்துகொள்ள திரைப்பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் நடந்த அனைத்து அம்சங்களும் முக்க்யமானதாகவே பார்க்கப்பட்டன.

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து பகத் பாசில் , ராணா டகுபதி, அமிதாப் பச்சன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்த நிலையில் மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மாஸ்டர்தான். பாடல் உருவான கதை பற்றி பேசிய தினேஷ் பாடல் வெளியாகி இரு தினங்களுக்கு பிறகு ரஜினி தினேஷ் மாஸ்டருக்கு போன் செய்தாராம். அப்போது பாடல் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மஞ்சுவாரியார் பின்னிட்டாங்களே என்று ரஜினி கூறினாராம்.

அதற்கு தினேஷ் மாஸ்டர் நீங்களும் க்யூட்டா பண்ணீங்க சார் என்று சொல்ல உடனே வெட்கப்பட்டு சிரித்தாராம் ரஜினி. அப்படியே சின்ன குழந்தையாகவே மாறினார் என்று தினேஷ் மாஸ்டர் கூறினார். மேலும் படப்பிடிப்பு சமயத்தில் நிறைய விஷயங்களை நானும் ரஜினி சாரும் பேசியிருக்கிறோம் என்றும் தினேஷ் மாஸ்டர் கூறினார்.

தினேஷ் மாஸ்டரும் ஏகப்பட்ட சித்தர் கோயிலுக்கு போவதால் அதை பற்றி பேசுவார்கள். உடனே ரஜினி தினேஷ் மாஸ்டருக்கு ஒரு பாபா புத்தகத்தை கிஃப்ட்டாக கொடுத்தாராம்.இதை என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக பார்க்கிறேன் என்றும் தினேஷ் மாஸ்டர் கூறினார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it