ரங்கராய சக்திவேல் நல்லவரா? கெட்டவரா? கமல் சொன்ன தக் லைஃப் பதில்!

Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தின் ரங்கராய சக்திவேல் குறித்து அவர் சொல்லி இருக்கும் அல்டிமேட் பதில் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் முதலில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திலிருந்து திடீரென துல்கர் வெளியேறினார். அவரிடத்திற்கு நடிகர் சிம்புவை அழைத்து வர பட குழு முடிவெடுத்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் இப்படத்திலிருந்து விலகினார்.
இதைத்தொடர்ந்து கதையில் மிகப்பெரிய மாற்றம் செய்து நடிகர் சிம்புவிற்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வனும் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தை விரைவில் முடித்து ஜூன் மாதத்திற்குள் வெளியிட முதலில் படக்குழு திட்டமிட்டு இருந்தது.
ஆனால் தற்போது மலையாள சினிமா உலகம் ஜூன் மாதத்தில் இருந்து மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது. அதனால் ஷூட்டிங் நடத்தப்படாமல் புது படத்தின் ரிலீஸ் செய்யும் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கசந்து இருக்கிறது.
இது தக்லைஃப் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதால் படத்தை ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே வெளியிடப்பட முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் திரிஷா கலந்து கொண்டனர்.
அப்பொழுது அவரிடம் படத்தில் கமல் நடித்திருக்கும் ரங்கராய சக்திவேல் நல்லவரா கெட்டவரா எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் இங்க நான் போய் மணிரத்னத்தை திரும்பி பார்க்க வேண்டாமா? எடிட்டிங் பண்ணாம கதைய சொல்லிட்டீங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது என்றார்.
அருகில் இருந்த நடிகை திரிஷா உங்களால் இந்த படத்திலும் அவர் நல்லவரா கெட்டவரா என்பதை கண்டுபிடிக்க முடியாது என்பார். உடனே கமல் ஆமாம் ரங்கராய சக்தி நல்லவர் பாதி. கெட்டவர் பாதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.