Categories: Cinema News Review

இந்தியிலும் இப்படி தரமான படம் எடுப்பாங்களான்னு மிரள விடுதே!.. ’ஸ்டோலன்’ திரை விமர்சனம் இதோ!..

பாலிவுட்டில் ஆரம்ப காலக்கட்டத்தில் எல்லாம் ராம் கோபால் வர்மா, அனுராக் காஷ்யப் படங்கள் எல்லாம் தரமான சம்பவங்களாக இருந்தன. அந்த காலத்தில் இருந்தே எம்ஜிஆர், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களே இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்திருப்பார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியில் தரமான படங்கள் ரொம்பவே குறைந்து விட்டன.

தென்னிந்திய படங்களையே அதிகம் ரீமேக் செய்து மொக்கை வாங்கி வருகின்றனர். தென்னிந்திய இயக்குனர்களான அட்லீ, சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்டோர் தான் பாலிவுட்டிலும் கமர்ஷியல் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டிலும் தரமான ராவான படம் எடுக்க ஆட்கள் உள்ளனர் என்பதை இயக்குனர் கரன் தேஜ்பால் நெத்திப் பொட்டில் அடித்தது போல இயக்கியுள்ள படம் தான் “Stolen”.

ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளி பெண்ணொருவர் தனது 5 மாத கைக்குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து இன்னொரு பெண் அந்த குழந்தையை நைஸாக திருடிக் கொண்டு ரயில் நிலையத்தில் ஓட்டமெடுக்கிறார். ராமன் பன்சால் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுபம் வர்தனை இடித்து விட்டு அந்த பெண் ஓடும் போது, குழந்தையின் தொப்பி கீழே விழுந்து விடுகிறது. அதை எடுத்து பார்க்கும் அவர், ஏதோ அவசரம் போல ஓடுகிறார் என நினைத்து அசால்ட்டாக இருக்கிறார்.

உறக்கத்தில் இருந்து எழும் ஜும்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள மியா மேல்சர், குழந்தையின் தொப்பி ராமனிடம் இருப்பதை பார்த்துவிட்டு அவன் தான் குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுவிட்டான் என ரயில்வே போலீஸில் புகார் அளிக்க, அங்கே இருப்பவர்கள், அவனை அடி வெளுக்கின்றனர்.

இன்னொரு பக்கம் முக்கியமான திருமணத்துக்காக வந்த தனது தம்பியை வரவேற்க வரும் அண்ணன் அபிஷேக் பானர்ஜி இந்த சூழலில் இருந்து தம்பியை மீட்க போராடுவதும், கடைசியில் குழந்தையை மீட்டார்களா? இல்லையா? என்கிற 94 நிமிடங்களே ஓடக் கூடிய படம் அந்தளவுக்கு த்ரில்லாகவும் ராவாகவும் உருவாகி இருக்கிறது.

2023ம் ஆண்டே உருவான இந்த படம் பல விருது விழாக்களில் பங்கேற்று விருதுகளை அள்ளிய நிலையில், கடந்த ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. கமர்ஷியல் பட விரும்பிகளுக்கு இந்த படம் பெரிதாக பிடிக்காது.

ஸ்டோலன் ரேட்டிங்: 4/5.

Saranya M
Published by
Saranya M