கேப்டனை தவிர மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து படம் பண்ணாத காரணம்! செல்வமணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

0
114

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் செல்வமணி. அதனால் விஜயகாந்திடம் பழகும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க ஒரு கதையை விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறார். அதுதான் புலன்விசாரணை திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் தான் முதன் முதலில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் செல்வமணி.

ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக வெளியான புலன் விசாரணை திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. விஜயகாந்துடன் சரத்குமார், ஆனந்த்ராஜ், ரூபினி போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆரம்பத்தில் செல்வமணி பல விதிகளை விதிக்க இதுவிஜயகாந்துக்கு ஒரு அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மணிவண்ணனின் உதவியால் பிரச்சினை சுமூகமாக படம் 1990ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டியது. இந்த நிலையில் விஜயகாந்தை தவிர செல்வமணி எடுத்த எந்தப் படங்களிலும் முன்னணி ஹீரோக்கள் நடித்திருக்கவே மாட்டார்கள். ஏனெனில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் பண்ணக் கூடாது என்ற முடிவில் இருந்தாராம் செல்வமணி.

அதற்கான காரணத்தையும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது ஆரம்பகாலங்களில் இரு பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு இவருக்கு வந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட அந்தப் படமே ஃப்ளாம் ஆகிவிட்டதாம். ஆனால் விஜயகாந்தை வைத்து எடுக்கும் போது பிரச்சினை வந்தாலும் அதை சரி செய்து தொடர்ந்து அவருடன் பயணிக்க முடிந்ததாம்.

ஆனால் மற்ற ஹீரோக்களுடன் பணிபுரியும் போது சின்ன சின்ன பிரச்சினை வந்தாலும் அவர்களுடன் ஜெல் ஆக முடியவில்லையாம். இதிலிருந்தே செல்வமணி ஒரு முடிவை எடுத்தாராம். பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணனும் என்றால் அவர்களிடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடன் சேர்ந்து படமே பண்ணக் கூடாது என முடிவு பண்ணினாராம்.

google news