Categories: Cinema News Gossips

ப்ளீஸ் சிம்பு எனக்கு வேணும்., சேர்த்து வைங்க.! அவர் வீட்டு முன்பு அட்ரசிட்டி செய்த சீரியல் நடிகை.!

தமிழ் சினிமா இளம் நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பது அவரை காதலிப்பதாக கூறுவது எல்லாம் அவர்களை திரையில் தொடர்ந்து ரசிப்பதற்கே. காதலிப்பதாக சில பெண்கள் கூறினாலும், அவர்களுக்கே தெரியும் அது வெறும் திரை காதல் தான் நிஜ வாழ்வில் அதெல்லாம் நடைபெறாது என்று.

ஆனால், ஒரு சீரியல் நடிகை இவ்வாறு கூறி, தமிழ் சினிமாவையே அதிரவைத்து வருகிறார். இவர் அண்மைக்காலமாக சிம்புவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது போலவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அட்ராசிட்டி செய்து வருகிறார்.

இவர், சில தினங்களுக்கு முன்னர், சிம்புவை நான் காதலிக்கிறேன்.  நீயும் சிங்கிள், நானும் சிங்கிள் உண்மையா லவ் பண்ணா பிளே பாய்னு தான் சொல்லும். என்னையும் அப்டி தான் சொல்றாங்க. நீ என்கூட வந்திரு நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என்றவாறு பிதற்றி இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்களேன் – சம்பளத்தை குறைங்க., நல்ல படம் கிடைக்கும் – உதயநிதி.!? விஜய், அஜித், ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு.!?

இது போதாது என்று, அண்மையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், சிம்பு வீட்டில் எதிரே இருந்து போராட்டம் செய்ய வாங்க. சிம்பு எனக்கு வேணும். என பதிவிட்டு  இன்ஸ்டாவை அலறவிடுத்துள்ளார். இறுதியாக பொழைச்சி போங்க என பதிவிட்டு சிலம்பரசனை டேக் செய்து முடித்துள்ளார் ஸ்ரீநிதி.

Manikandan
Published by
Manikandan