‘தளபதி 69’ல இது நடக்கனும்னு வேண்டிக்கிறேன்! சிம்ரனுக்கே இந்த ஆசையா?

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் இருந்த நேரத்தில் இவர்தான் டாப்பில் இருந்தார். வேறு எந்த நடிகையாலும் சிம்ரன் இடத்தை அடையமுடியவில்லை. அந்தளவுக்கு ஒரு முன்னணி நடிகையாக இருந்தார் சிம்ரன். விஜய் , அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர். மிகப்பெரிய புகழை அடைந்தவர்.

இடுப்பழகி என்ற பெயருக்கும் சொந்தக்காரர். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சிம்ரன் ஒரு கம்பேக் கொடுத்தார். ஆனால் முன்பு இருந்ததை போல் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அதன் பிறகு பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடி சேர்ந்ததன் மூலம் மீண்டும் சிம்ரன் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது.

அதை அடுத்து அந்தகன் திரைப்படம் சிம்ரன் இஸ் கம்பேக் என்ற வகையில் அமைந்தது. இந்த நிலையில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 69 படத்தில் அவர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சிம்ரன் மட்டுமில்லை. சமந்தா, மமிதா பைஜூ என மூன்று நாயகிகள் தளபதி 69 படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் தளபதி 69 படத்தை பற்றி சிம்ரனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது தளபதி 69 படத்தில் எனக்கும் நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட் அந்தப் படத்தில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அது சாத்தியமாகும். நானும் வேண்டிக்கொள்கிறேன் அது நடக்க வேண்டும் என்று சிம்ரன் கூறினார்.

சிறந்த ஆன் லைன் பேர் என்றால் யாரை சொல்வீர்கள்? விஜயா? அஜித்தா? என்ற கேள்வியும் சிம்ரனிடம் கேட்டார்கள். அதற்கு சிம்ரன் பதில் சொல்வதற்கு முன்பே ரசிகர்கள் விஜய் என கத்த சிம்ரனும் நேயர்கள் விருப்பம் தான் எனக்கும் என கூறினார். விஜயின் கடைசி படமாக தளபதி 69 படம் அமைவதால் மீண்டும் அதே மாதிரியான ஜோடி இணையவேண்டும் என ஆசைப்படுகிறேன் என சிம்ரன் கூறினார்.

பொலிட்டிக்கல் சப்ஜெக்ட்டில் உருவாகும் தளபதி 69ல் சிம்ரனுக்கு எந்த மாதிரியான கேரக்டர் இருக்கும் என தெரியவில்லை. எல்லாம் எச்.வினோத் கையில்தான் இருக்கிறது. இதுவரை விஜய் சிம்ரன் ஜோடி ஒரு பெஸ்ட் காதல் ஜோடிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் மாற்றி வைக்கலாம் என விஜய்க்கு வில்லி மாதிரியான கேரக்டரில் சிம்ரனை நடிக்க வைக்காமல் இருந்தால் சரி.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it