அஜித்தே கடவுளே! ஒரு அப்டேட் இல்லைனாலும் டிரெண்டிங்காகும் தல..

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமாக துணிவு திரைப்படம் அமைந்தது. விஜயின் வாரிசு படத்தோடு மோதிய துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது.ஆனால் எப்பவும் போல் வாரிசு படம் வணிக ரீதியாக துணிவு படத்தை முந்தியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜயின் படங்கள் நேரடியாக மோதியதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்கிடையில் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அஜித்தின் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. வாரிசு படத்திற்கு பிறகு லியோ மற்றும் கோட் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் அஜித் படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

அவர் நடித்து முடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் கூட எப்பொழுது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலிஸ் ஆக இருக்கும் நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸராவது வெளியிடலாம் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டேடியத்திலேயே வலிமை அப்டேட் கேட்ட சம்பவம் பெரும் வைரலானது. அதை போல இப்பவும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அனைவரும் ‘அஜித்தே கடவுளே’ என கூவி விடாமுயற்சி அப்டேட்களை கேட்டு கூத்தடித்திருக்கின்றனர்.

அஜித்தே கடவுளே என்ற பெயரில் ஹேஸ் டேக்கே ஆரம்பித்து இணையத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் மாநாடு நடத்த பெரிய அளவில் ஏற்பாடு செய்து வரும் விஜயை பற்றி யாரும் பேசாமல் எந்தவொரு அப்டேட்டும் கொடுக்காத அஜித்தை இந்தளவு டிரெண்டாக்கி வருகிறார்களே என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it