Categories: Cinema News Gossips

அன்றே கணித்தார் ‘ரோலக்ஸ்’ சூர்யா.! பட்டைய போட்டு வெளுத்து வாங்க காத்திருக்கும் கார்த்தி.!

கடந்த வாரம் ரிலீசான விக்ரம் பாதையின் தாக்கம் இன்னும் பல இடஙக்ளில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகநாயகன் கமல், ஃபகத் பாசில் , விஜய் சேதுபதியை விட இறுதி காட்சியில் வந்து மிரட்டிய சூர்யா தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டார்.

அதுவும், அடுத்த பாகத்தில் அவர்தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அடுத்த பாகத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இதனை சூர்யா பல ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டார். அதாவது, இயக்குனர் லிங்குசாமி  ஒரு மேடையில் நீங்களும் கார்த்தியும் இணைந்து நடிக்க ஆசை இருக்கிறதா என கேட்க

அதற்கு அமைதியான மிரட்டலாக வில்லனாக நான் நடிக்க வேண்டும் என்றும், தம்பி கார்த்தி பட்டை போட்டுகொண்டு பருத்திவீரன் லுக்கில் ஒரு படம் நடிக்க வேண்டும்  என கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – நீங்க எல்லை மீறி போய்ட்டீங்க…ரெடியா இருங்க!…எகிறிய சுசித்ரா!..பம்மிய பயில்வான்.!

தற்போது கிட்டத்தட்ட அதே போல ஒரு வேடத்தில் தான் கார்த்தி கைதி 2வில் நடிக்க உள்ளார். அதில் வரும் முக்கிய வில்லன் ரோலக்ஸாக தான் சூர்யா விக்ரம் படத்தில் தலைகாட்டியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் அன்றே கணித்தார் சூர்யா என பகிர்ந்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan