சூர்யாவுடன் 4வது முறையாக இணையும் ரஹ்மான்! சூப்பர் காம்போவாக உருவாகும் ‘சூர்யா 45’

தற்போது சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சூர்யா கார்த்திக் சுப்புராஜு உடன் இணைந்து அவருடைய 44-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அவருடைய 45 ஆவது திரைப்படத்தைப் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன .சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கப் போவதாக தகவல்கள் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி விஜய் இடம் ஒரு கதை சொன்னதாகவும் ஆனால் அது நடக்காமல் போனது அனைவருக்குமே தெரியும்.

இப்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஆர் ஜே பாலாஜி. ஆர் ஜே பாலாஜியை பொருத்தவரைக்கும் நடிகராக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு கலைஞராக திகழ்ந்து வருகிறார் .முதலில் எல்கேஜி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார் பாலாஜி.

அதன் பிறகு வீட்டில் விசேஷம், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை கொடுத்து தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகராக இயக்குனராக மாறினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் சுமாரான வெற்றியை பதிவு செய்தாலும் அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த நிலையில் சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில் ஆர்.ஜே பாலாஜி மற்றும் சூர்யா இணையும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே சூர்யா ஏ ஆர் ரகுமான் காம்போவில் ஜில்லுனு ஒரு காதல் 24 ஆயுத எழுத்து போன்ற படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மூன்று படங்களில் அமைந்த பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் சூப்பர் ஹிட். ஒரு ஆல்பம் ஹிட் ஆகவே மாறியது .

இப்போது நான்காவது முறையாக சூர்யாவுடன் இணைகிறார் ஏ ஆர் ரகுமான். இது பற்றிய ஒரு அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. எண்பது சதவீதம் ஏ ஆர் ரகுமான் தான் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாக சொல்லப்படுகிறது

rohini
rohini  
Related Articles
Next Story
Share it