முதல் நாள் சூர்யா!.. அடுத்த நாள் தளபதி விஜய்!.. கேப் விடாம ஹைப் ஏத்துறாங்களே!..

by rohini |   ( Updated:2024-10-20 08:30:20  )
surya
X

surya

தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் சூர்யா. ஒரு பக்கம் விஜய் அவருடைய பாணியில் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்து இன்று ஒரு வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் சூர்யா தனக்கென ஒரு பாதையை அமைத்து அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துக்கொண்டு விதவிதமான கதைக்களத்தில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படமான கங்குவா திரைப்படம். நவம்பர் மாதம் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. இந்த படத்திற்காக இரண்டு வருட காலம் தன்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறார் சூர்யா.

இந்த இரண்டு வருடங்களில் ஒரு பெரிய நடிகராக இருந்து கொண்டு எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்த ஒரு படத்திற்காக இரண்டு வருட காலம் முழு உழைப்பையும் போட்டு இன்று ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவெடுத்து இருக்கிறது. அவ்வளவு சாதாரணமாக எந்த ஒரு நடிகராலும் ஒரு படத்திற்காக இரண்டு வருட காலம் உழைப்பை போட முடியாது.

ஆனால் சூர்யா அதை செய்து இருக்கிறார். இந்த படம் மட்டும் எதிர்பார்த்த அளவு வெற்றியடைந்து விட்டால் சூர்யாவின் மார்க்கெட்டே மிக உயரத்தில் சென்று விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பல கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் நிச்சயமாக 2000 கோடி வசூலை பெறும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த கங்குவா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நேற்று உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கின்றது. அடுத்த நாளே ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கின்றது.

இதுவும் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு தருணம். படத்தில் மட்டுமே பஞ்ச் பஞ்சாக டயலாக் பேசியிருந்தார் விஜய். இப்பொழுது நேரடியாக அவருடைய வசனத்தை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அரசியல் கட்சி ஆரம்பித்து எந்த ஒரு பேட்டியும் கொடுக்காத விஜய் இந்த மாநாட்டிலாவது அவருடைய ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொள்கையையும் பேசுவார் என்பதால் இந்த மாநாட்டிற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி 26, 27 என இந்த இரு தேதிகள் மொத்த ரசிகர்களுக்கும் ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Next Story