இந்தியன் 2 ஓடல!.. காச திருப்பி கொடுங்க!.. பொங்கும் தியேட்டர் அதிபர்கள்!. ரூட்டை திருப்பிவிட்ட உதயநிதி…

0
125

திரையுலகில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு திரைப்படத்தை வியாபாரம் செய்வதில் பல முறைகள் இருக்கிறது. தயாரிப்பாளரே படத்தை நேரிடையாக தியேட்டரில் வெளியிடுவது. அடுத்து வினியோகஸ்தர்கள் மூலம் வெளியிடுவது. அப்படி வரும்போது தியேட்டரில் கிடைக்கும் வசூலை தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் என மூவரும் பிரித்து கொள்வார்கள்.

வினியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக வாங்கிக்கொள்வார். அதேபோல், தியேட்டர் அதிபர்கள் வினியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் கொடுப்பார்கள். படம் லாபம் எனில் அட்வான்ஸ் தொகையை கழித்துக்கொண்டு மீதியுள்ள பணத்தை பிரித்து கொள்வார்கள்.

அதுவே நஷ்டம் எனில் அதே தயாரிப்பாளர் அல்லது வினியோகஸ்தர் அடுத்த படத்தை வெளியிடும்போது செக் வைத்து பணத்தை வசூல் செய்வார்கள். அதாவது, கொடுக்க வேண்டிய பணத்தை கழித்து விடுவார்கள். தற்போது இந்தியன் 2 படமும் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களை கவரவில்லை. படம் வெளியாகி 3வது நாளிலேயே அட்வான்ஸ் புக்கிங் ஒன்றும் இல்லாமல் போனது. மேலும் ஒவ்வொரு தியேட்டரிலும் 15லிருந்து 20 பேர் வரை மட்டுமே படம் பார்க்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாமல் போனது.

இந்தியன் 2 படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்தது. தியேட்டர் அதிபர்களிடம் அட்வான்ஸ் தொகையாக ரூ.55 கோடி வாங்கி இருக்கிறது. அதோடு, 2 வாரத்திற்கு படத்தை தியேட்டரில் இருந்து எடுக்கக்கூடாது என்கிற கண்டிஷனும் போடப்பட்டிருக்கிறது.

இப்போது வசூலே இல்லாமல் படத்தை ஓட்டி வருகிறார்கள் தியேட்டர் அதிபர்கள். இதனால் கிட்டத்தட்ட 30 கோடி வரை வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய நிலையில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இருக்கிறது. எனவே, அந்நிறுவனம் வெளியிடும் ராயன் படத்தில் காசை கழித்து கொள்ளலாம் என கணக்கு போட்டார்கள் தியேட்டர் அதிபர்கள். ஆனால், அந்த படத்தை நாங்கள் வெளியிட்டாலும் கணக்கு வழக்கை நேரியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசிக்கொள்ளுங்கள் என கை விரித்துவிட்டது ரெட்ஜெயண்ட். எனவே, இந்தியன் 2 நஷ்டத்தை எப்படி கழிப்பது என யோசித்து வருகிறார்களாம் தியேட்டர் அதிபர்கள்.

google news