கேங்ஸ்டர் லுக்கில் கலக்கும் சிம்பு.. பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு..!

by Ramya |   ( Updated:2025-02-03 05:20:38  )
thug life
X

Actor Simbu: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்த நடிகர் சிம்பு அதனைத் தொடர்ந்து காதல் அழிவதில்லை என்கிற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க தொடங்கினார்கள்.

காதல் சர்ச்சைகள்: ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிம்பு பின்னர் நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி பெயரைக் கெடுத்துக் கொண்டார். தொடர்ந்து பல நடிகைகளுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு அதன் பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சரியாக வருவதில்லை.


தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் பிரச்சனை என ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தனது உடம்பை சரியாக கவனித்துக் கொள்ளாமல் வெயிட் போட்டு படங்களில் சரியாக நடிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் சிம்பு. பின்னர் சினிமாவில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்ட சிம்பு மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

சிம்புவின் கம்பேக்: உடல் எடை கூடி அவதிப்பட்டு வந்த சிம்பு பின்னர் கடகடவென தனது உடம்பை குறைத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு என்கின்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி வைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விடுவார் சிம்பு என்று எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த வருடம் சிம்பு நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு எஸ்டிஆர் 48 என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அப்படம் தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் அதற்குப் பிறகு வெளியாகவில்லை.

சிம்புவின் லைன்அப்: தேசிங்கு பெரியசாமி சொன்ன கதை நடிகர் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் இப்படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில் நடிகர் சிம்பு அடுத்ததாக பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை தவான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கின்றார்.


தக் லைஃப்: இதற்கிடையில் நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு கேஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் 42வது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Story