நானும் போட்டிக்கு வரலாமா? கமல்ஹாசனின் தக் லைஃப் பட சூப்பர் அப்டேட்!..

Thuglife: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக்லைஃப் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்திற்குப் பின்னர் கமலுடன் இணைந்து இருக்கிறார் மணிரத்னம்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு வித்தியாசமான கெட்டப்பில் கமல்ஹாசன் வந்து அசத்தியிருப்பார். முதலில் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் துல்கர் மலையாளம் மற்றும் தமிழில் பிசியாக நடித்து வந்ததால் இப்படத்தில் இருந்து விலகினார்.

அதைத்தொடர்ந்து தமிழில் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜெயம் ரவியும் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இப்படத்திற்குள் நடிகர் சிலம்பரசன் புது எண்ட்ரியாக உள்ளே வந்தார். ஆனால் அவருடைய கதாபாத்திரத்தை மணிரத்னம் தனியாக புதிதாக உருவாக்குவதாக கூறப்பட்டது.

இடையில் சிம்பு மற்றும் கமல் இணைந்த புகைப்படம் ஒன்று கசிந்து வைரல் ஆகியது. அதில் கமலின் சத்யா கெட்டப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் மிகப்பெரிய சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு முடித்துள்ளது.

அதை தொடர்ந்து நேற்றுடன் தங்களை திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட பணிகளை படக்குழு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதனால் அடுத்த மே 2025-ல் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles
Next Story
Share it