அமெரிக்கா வரை பரவிய ரஜினியின் புகழ்! கடைசில இவங்களையும் விடலயா?

தமிழ் திரையுலகில் மிகவும் உச்சம் தொட்ட நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் நடிகராக இருக்கிறார். இவருக்கென தமிழ் சினிமாவில் ஒரு சாம்ராஜ்ஜியமே இருக்கிறது. கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக அந்த சாம்ராஜ்ஜியத்தை கட்டி காத்து வருகிறார் ரஜினி. இவரை பற்றி பல விமர்சனங்கள் எழலாம்.

யாருக்கும் உதவ முன்வர மாட்டார். சரியான கஞ்சம் என்றெல்லாம் ரஜினியை பற்றி விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அஜித்தை போலவே ரஜினி மறைமுகமாக பல பேருக்கு உதவிகளை செய்து கொண்டுதான் வருகிறார். வலைப்பேச்சு அந்தணன் கூட ஒரு பேட்டியில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு இன்னும் ரஜினியின் கையில் இருந்து காசு வரவில்லை என்று கூறியிருந்தார்.

கர்நாடகாவில் இருந்து வந்தவரை தமிழ் சினிமா ஆரத் தழுவி தன் பிள்ளையாக்கிக் கொண்டது. அப்படி இருக்கும் போது இந்த தமிழ் சினிமாவிற்காக ரஜினி உதவி செய்யாமலா இருப்பார். அமைதியாக இருக்கிறார் என்றால் அதில் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். பல முன்னணி நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்காக கோடிகளை வீசிய நிலையில் ரஜினி மட்டும் சும்மா இருப்பாரா என்ன?

கண்டிப்பாக செய்வார். இந்த நிலையில் ரஜினியின் புகழ் அமெரிக்கா வரை பரவியிருக்கிறது. அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரிடம் தமிழ் சினிமா பார்ப்பீர்களா? தமிழ் நடிகர்களை பற்றித் தெரியுமா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அந்த அமெரிக்கா தூதர் எனக்கு ரஜினியை பிடிக்கும். எனக்கு மட்டும் இல்லை. என் அப்பாவுக்கு தாத்தாவுக்கு எல்லாம் ரஜினியைத்தான் பிடிக்கும். ரஜினியை மிகவும் ரசிப்பார்கள். இப்போது நான் ரசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். சின்னக் குழந்தைகள் முதல் தாத்தா வரை அனைவரும் விரும்பும் நடிகராகவே ரஜினி மாறியிருக்கிறார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it