கங்குவா படம் கண்டிப்பா ஃபிளாப்தான்!.. இவருக்கு அப்படி என்ன கோபம் தெரியலையே!...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் திரைப்படம் கங்குவா. பல மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப் படம் பல கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் இதுவரை இல்லாத ஒரு படமாக கங்குவா திரைப்படம் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தப் படம் வெற்றியடைய வாய்ப்பு இல்லை என்பது போல வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியதாவது:
என்னை பொறுத்த வரைக்கும் கங்குவா திரைப்படம் அந்த அளவுக்கு வெற்றியை கொண்டாடாது என நான் நினைக்கிறேன். என்ன காரணம் எனில் பாகுபலி பார்த்து இவங்க செய்த ஒரு படம். அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கிய படங்களை பாருங்கள். இந்த மாதிரியான ஒரு படத்தை ஹேண்டில் பண்ணுவதற்கான இயக்குனர் இவர் இல்லை என நான் நினைக்கிறேன்.
சிவாவின் படங்களை பார்க்கும் போதே நமக்கு தெரியும். விசுவாசம் ,அண்ணாத்த, வீரம் இது எல்லாமே ஒரே மாதிரியான படங்கள் தான். கதையில் கூட வேறு மாதிரியாக சிந்திக்க முடியாத ஒரு இயக்குனர். அது மட்டுமல்ல இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டில் இப்படி வளரவே இல்லை.
கங்குவா படத்தை பார்த்தால் சமகாலத்தில் நடக்கிற கதையாக தான் தொடங்கினார்கள். அதன் பிறகு மகதீரா படம் மாதிரி ஒரு ஃப்ளாஷ் பேக் ஹிஸ்டாரிக்கல் என்ற அளவில் பிளான் செய்தார்கள். அதன் பிறகு படம் வளர்ந்து கொண்டே போக சமகாலத்தில் நடக்கும் போர்ஷனை குறைக்கிறார்கள்.
வரலாற்று பின்னணியில் அமையக்கூடிய அந்த கதை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் இது இரண்டு பாகங்கள் எனக் கூறுகிறார்கள். இது எல்லாமே ஷூட்டிங் நடக்கும் போதே முடிவாகிக் கொண்டே இருந்தது. அதனால் அந்த படத்தின் மீது ஒரு பெரிய நம்பிக்கை வரவில்லை.
அது மட்டுமல்ல நான் பலரிடம் இந்த கங்குவா படத்தை பற்றி பேசும்போது இது ஒரு வீடியோ கேம் மாதிரியே இருக்கிறது. அந்த காட்சி எல்லாம் பார்த்தால் கூட சிறு பிள்ளைத்தனமாக தான் இருந்தது. இதை வைத்து தான் எனக்கு அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை.
ஆனால் என்ன இருந்தாலும் சினிமாவுடைய வெற்றியை நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடியுமே தவிர தீர்மானிக்க முடியாது. அதையும் மீறி இந்த படம் மக்களுக்கு பிடித்து ஒரு பெரிய வெற்றி படமாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதையும் நாம் மறுக்க முடியாது என பிஸ்மி கூறி இருக்கிறார்.