வரலட்சுமி கொடுத்த நச் பதில்! உண்மையான நடிகைனா இவங்கதான்பா


தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி. போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வரலட்சுமி தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும் வில்லியாகவும் நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையாக மாறினார் வரலட்சுமி. ராதிகாவை போல தைரியமான பெண்மணியாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் வரலட்சுமி.

எதையும் ஓப்பனாக பேசுபவர். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என தன் பேச்சில் ஒரு தைரியம் இருக்கும். சமீபகாலமாக தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. சமீபத்தில் தான் வரலட்சுமிக்கு திருமணம் நடந்தது. மிகப்பெரிய தொழிலதிபரான நிக்கோலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி.

நிக்கோலை பொறுத்தவரைக்கும் அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த நிக்கோலை இப்போது இரண்டாவதாக வரலட்சுமியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு வரலட்சுமி தொடர்ந்து நடிப்பார் என நிக்கோலே ஒரு பேட்டியில் கூறினார்.

இந்த நிலையில் துபாயில் சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. வீர சிம்ஹா ரெட்டி படத்திற்காக வரலட்சுமி நாமினேட் செய்யப்பட்டிருந்தார். அந்த விழாவிற்கு வந்த வரலட்சுமியிடம் பாலகிருஷ்ணாவுடன் நடித்ததை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு வரலட்சுமி பாலகிருஷ்ணாவுடன் நடிப்பது என்பது புது எனர்ஜி வருவதற்கு சமம். நானே ஹைப்பில் நடிப்பேன். என்னை விட பெரும் ஹைப்பில் நடிப்பவர் பாலகிருஷ்ணா என வரலட்சுமி கூறினார். மேலும் தொடர்ந்து ஹீரோயினா நடிப்பீங்களா? வில்லியாக நடிப்பீங்களா என்றும் கேட்டார்கள்.

அதற்கு வரலட்சுமி நடிகையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என கூறினார். பொதுவாகவே வரலட்சுமி எந்த கதாபாத்திரமானாலும் அதை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர். ஹீரோயினாகத்தான் நடிக்க வேண்டும் என என்றைக்கும் சொன்னதில்லை. ஒரு கதாபாத்திரம் மக்களை எந்தளவுக்கு சென்றடைகிறது என்பதை பொறுத்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் வரலட்சுமி. உண்மையான நடிகைக்கு இருக்கும் தகுதி வரலட்சுமிக்கும் இருக்கிறது.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it