அவர் மட்டும் இல்லான்னா விசாரணை படமே இல்ல!.. பல வருடம் கழித்து சொன்ன வெற்றிமாறன்!...

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் சீடர்களில் இவரும் ஒருவர். தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி ரசிகர்களிடம் அறிமுகமானார். பொல்லாதவன் கமர்ஷியல் படம் என்றாலும் அப்படத்தின் திரைக்கதையை வெற்றிமாறன் அமைத்திருந்த விதம் ஆச்சர்யபடுத்தியது.

அதன்பின் மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததோடு வெற்றிமாறனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. படமும் தேசிய விருதை பெற்றது. அதன்பின் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக மாறினார் வெற்றிமாறன்.

எல்லோரும் அவரின் படங்களை கவனிக்க துவங்கினார்கள். அடுத்து அவர் இயக்கிய திரைப்படம்தான் விசாரணை. இது ஒருவர் தனது நிஜ வாழ்வில் சந்தித்த சம்பவங்களை வைத்து எழுதியிருந்த நாவல். அதை சினிமாவுக்கு ஏற்றார் போல அழகாக மாற்றியிருந்தார் வெற்றிமாறன்.

தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புக்காக ஆந்திரா செல்லும் சில இளைஞர்களை போலீசார் பொய் வழக்குப்போட்டு காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் அது. இந்த படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் வட சென்னை, அசுரன், விடுதலை ஆகிய 3 படங்களை இயக்கிவிட்டார் வெற்றிமாறன்.


இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். சூரி போன்ற காமெடி நடிகர்களையும் சிறந்த நடிகராக மாற்றும் வித்தை வெற்றிமாறனுக்கு நன்றாகவே கை வருகிறது. சமீபத்தில் லப்பர் பந்து படத்தை பார்த்த வெற்றிமாறன் அப்படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வெற்றிமாறன் ’தினேஷ் மாதிரி ஒரு நடிகன் இல்லனா என்னால் விசாரணை படத்தை எடுத்திருக்கவே முடியாது. அந்த படத்துக்கு தினேஷ் கொடுத்த அர்ப்பணிப்பு மிகப்பெரியது. நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நான் ஒரு நடிகனாக இருந்திந்தால் படத்தின் பாதியிலேயே ‘இனிமே என் வாழ்க்கையில் நடிக்க ஆசைப்படவே மாட்டேன்’ என சொல்லிவிட்டு போயிருப்பேன். அவ்வளவு கஷ்டமான படம் அது’ என தினேஷை பாராட்டி பேசியிருந்தார் வெற்றிமாறன்.

Related Articles
Next Story
Share it