இருந்த மார்கெட்டும் போச்சா? அமிதாப் பச்சனுக்கு இது தேவையா? இத எதிர்பார்க்கலயே

by rohini |   ( Updated:2024-10-11 06:41:08  )
amithab
X

amithab

அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேட்டையன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. த ச ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் ,ரித்திகா சிங், அபிராமி, ரோகினி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. அதற்கு காரணம் ஜெய் பீம் இயக்குனர் என்ற ஒரு பெயர்தான். ஜெய் பீம் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சமூக கருத்தை உள்ளடக்கிய கதையாக அந்தப் படத்தை எடுத்திருந்தார் ஞானவேல் .

அப்படி ஒரு பார்வையில் இருக்கும் ஞானவேல் எப்படி ரஜினியை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுப்பார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்த ஒரு சந்தேகம்தான் ரஜினிக்கும் இருந்திருக்கிறது. இதை வேட்டையன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினியே கூறினார்.

ஆனால் ரஜினிக்கு உண்டான மாஸ் அதனுடன் இணைந்து தன்னுடைய கருத்தையும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஞானவேல் ஒரு சூப்பர் ஹிட் கமர்சியல் பேக்கேஜாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் ரிலீசான இரண்டாவது நாளில் படத்தின் மீது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் ஹிந்தியில் முதல் நாளில் வெறும் ஆறு லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுவும் அமிதாப்பச்சன் இந்தப் படத்தில் நடித்திருந்தும் ஹிந்தியில் இவ்வளவுதானா வசூல் என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். வெளியான பெரிய நடிகர்களின் திரைப்படங்களிலேயே குறைந்த வசூல் செய்த திரைப்படமாக ஹிந்தியில் இந்த படம் பெயர் வாங்கி இருக்கிறது. இது ஒரு பெரிய டிசாஸ்டர் என்றும் கூறப்படுகிறது.

Next Story