கிட்டவே நெருங்க முடியாத ரெட் ஜெயண்ட்! ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு இப்படி ஒரு போட்டியா?

பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த படங்களின் தமிழ் வினியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் கைப்பற்றும். அதைப்போல வேட்டையன் திரைப்படத்தையும் கைப்பற்றும் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது .

ரஜினி நடிப்பில் தச ஞானவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் தான் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ட்ரெய்லர் பாடல்கள் ஆகியவை வெளியான பிறகு படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதுவரை ரஜினியின் கூலி திரைப்படத்தை பற்றி தான் சமூக வலைதளங்களில் பெருமளவு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ட்ரெய்லர் விழா நடந்த பிறகு வேட்டையன் திரைப்படத்தின் மீதுள்ள ஹைப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த விழா மேடையில் ரஜினி பேசிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுவும் இந்த படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. பெரிய மல்டி ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன் பல வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் இணைந்து பகத்பாசில் ராணா மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் போன்ற பல நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள் அனிருத் இசையில் பாடல்கள் அற்புதமாக வெளிவந்திருக்கின்றன. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் தான் கைப்பற்றும் என எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்த படத்தின் தமிழ் விநியோக உரிமையை கைப்பற்ற பல பேருக்கு இடையே போட்டி கடுமையாக நிலவி வருகிறதாம். குறிப்பாக 5 ஸ்டார் செந்தில் இந்தப் படத்தை அதிக விலைக்கு ஸ்கோர் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை அவர் தான் இதனுடைய தமிழ் விநியோக உரிமையை கைப்பற்றுவார் எனக் கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it