புது ரெக்கார்டை உருவாக்கிய கோட் திரைப்படம்! எத்தனை பேர் வந்தாலும் அண்ணன் கில்லி

விஜய் நடித்த கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி மூன்று வாரங்களை கடந்த நிலையிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்ட வரவேற்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் கோட். இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

ஒவ்வொரு நாளும் அதனுடைய கலெக்ஷன் கூடிக்கொண்டே தான் போனது. இரண்டாவது வாரத்தில் 420 கோடி என்ற வகையில் அதனுடைய கலெக்ஷன் இருந்தது. எத்தனையோ பல புதிய திரைப்படங்கள் வெளியானாலும் கோட் திரைப்படம் அதற்கான ஸ்கிரீனை தமிழ்நாட்டில் தக்கவைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோட் திரைப்படத்திற்கு இன்றுவரை ஒரு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த வாரம் 7 புதிய திரைப்படங்கள் வெளியான நிலையிலும் கோட் திரைப்படத்திற்கு என ரசிகர் கூட்டம் சென்ற வண்ணம் இருந்தார்கள். இந்த நிலையில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி 15 வது நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 215 கோடி வசூல் சாதனை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மூன்றாவது வாரத்தில் மட்டும் 16 கோடி என மதிப்பிடப்படுகிறது.

இது விஜயின் கெரியரில் ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் 200 கோடியை தாண்டிய படமாக கோட் திரைப்படம் அமைந்திருக்கிறது இதற்கு முன் லியோ, பொன்னியின் செல்வன் முதல் பாகம் போன்ற படங்கள்தான் தமிழகத்தில் 200 கோடியை தாண்டிய படமாக இருந்தது. இப்போது மூன்றாவது படமாக கோட் திரைப்படம் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது .

அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இரண்டு 200 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் விஜய் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் தளபதி விஜய். மற்ற மாநிலங்களில் கோட் படத்தின் வேகம் குறைந்தாலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவு கிடைத்து வருகிறது .

கோட் படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் 447 கோடி என்று சொல்லப்படுகிறது .விரைவில் 450 கோடியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா மகன் என இரட்டை வேடங்களில் இந்த படத்தில் கலக்கிய விஜய் இந்த படத்திற்கு பிறகு அவருடைய 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார் .அந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். அந்த படம் தான் அவருடைய கடைசி படமாகும்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it