விஜய் மாநாட்டுக்கு தலைக்கு ரெண்டாயிரமாம்... ஆனா விஜய் போட்ட கண்டிப்பான உத்தரவு !

தளபதி விஜயின் தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி 'வி' சாலையில் வரும் அக்டோபர் 27ல் நடக்க உள்ளது. இது நடக்கவே நடக்காது என்கிறது ஒரு தரப்பு. அக்டோபர் 31ல் தீபாவளி வருவதால் தள்ளிப் போயிடும்னு சொல்றாங்க.

மழை வருணபகவான் மிரட்ட ஆரம்பிச்சிடுவாரு. அதனால மாநாடு நடக்குறது சாத்தியமில்லை என்கிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எந்த மழை வந்தாலும் இடி இடித்தாலும் மாநாடு நடந்தே தீரும்னு உறுதியாகச் சொல்கிறார்.

அதே போல காவல்துறை 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதில் மாவட்டக் காவல்துறை ரொம்ப உறுதியாக இருக்கிறதாம். 85 ஏக்கர் நிலத்தை மாநாட்டுக்காக பல விவசாயிகள் கொடுத்துள்ளார்களாம். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.

மாநாட்டுக்கு வரும் கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கைகள் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை போடப்பட்டுள்ளது. விஐபி லிஸ்டில் ராகுல் காந்தியே வரப்போவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதனால் அவர்களுக்கான போதிய வசதிகள் செய்யப்பட வேண்டும்.

100 கோடி ரூபாய் மாநாட்டுக்காக பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்கிறார்கள். இந்தக் கட்சி மாநாட்டுக்காக பணம் கொடுக்கவும் சில தொழில் அதிபர்கள் தமிழகத்திலேயே காத்து இருக்கிறார்களாம். வருகிற கட்சித் தொண்டர்களுக்கு யாரும் 10 பைசா செலவு பண்ணக்கூடாதுன்னு விஜய் உத்தரவு போட்டுருக்காராம்.


வருபவர்களுக்குப் போக்குவரத்து செலவு, உணவு, தண்ணீர், ஸ்நாக்ஸ், டீ, காபி என எல்லாவற்றையும் கட்சியே பார்த்துக் கொள்ளுமாம். இதன்படி பார்த்தால் தலைக்கு 2000 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக உள்ளார்களாம். அதே போல உளவுத்துறை வளையத்துக்குள் தளபதி விஜய் வந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it