மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஐந்து குழந்தைகளா? கடைசி குழந்தைகள் வயது இவ்வளவுதானா?
Vivek: சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கின் குழந்தைகள் குறித்து அவர் மனைவி அருட்செல்வி பேசியிருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
துணை நடிகராக தமிழ் சினிமாவில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினாலும் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.
காமெடிகளில் கூட சமூகத்திற்கான கருத்தை சொன்னதில் விவேக் என்றுமே வல்லவர்தான். அதுமட்டுமல்லாமல் உருவகேலி, முகம் சுழிக்கும் இரட்டை வசனங்கள் உள்ளிட்ட எந்தவித கேடான விஷயமும் விவேக்கின் காமெடிகளில் இருந்தது இல்லை.
தொடர்ச்சியாக நடிப்பில் தனி கவனம் செலுத்தி வந்தார். காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான விஷயங்களிலும் தன்னுடைய ஈடுபாட்டை கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்.
கலாமின் வழியை பின்பற்றி பல லட்சம் மதிப்பிலான மரங்களை நட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் கொரோனோ பரவல் தமிழகத்தில் அதிகரிக்க இப்போதும் விழிப்புணர்வு விஷயங்களில் முதல் ஆளாக இருப்பவர் நடிகர் விவேக்.
மக்களிடம் தடுப்பூசிக்காக பயமிருந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவருக்கு உடல் நலம் மோசமாகி உயிரிழந்தார். இது பலருக்கும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேசி இருக்கிறார். மேலும், விவேகிற்கு மொத்தம் ஐந்து குழந்தைகள் என்ற ஆச்சரிய உண்மையையும் கூறியிருக்கிறார்.
முதல் மகள் அம்ரிதா நந்தினி, ஆர்க்கிடெக்ட் படிச்சிருக்காங்களாம். இரண்டாவது மகள் தேஜஸ்வினி லாயருக்கு படித்திருந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. மூன்றாவது மகன்தான் பிரசன்னா. இவர்தான் சில ஆண்டுகள் முன்னர் உடல் நலக் கோளாறால் உயிரிழந்தார்.
மகனின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத நடிகர் விவேக், அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகளுக்கு தந்தையானார். தற்போது குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு படித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
Also Read: கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?