வேறு எந்த நடிகருக்கும் இல்லாத சிறப்பு பிரபுவிடம் இருக்காமே... அப்படி என்ன தான் ஸ்பெஷல்?
எந்தவித பந்தாவும் பண்ணாமல் கொடுத்த கேரக்டர்களுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்துக்கொடுப்பவர் பிரபு. அவரது படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமோ துளியும் இருக்காது. இது தாய்க்குலங்களை ஈர்த்தது. அதனால் அவரது படங்கள் என்றாலே பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் வந்துவிடும். அவரது படங்களில் ஒரு ஸ்பெஷல் உள்ளது. என்னன்னு பார்க்கலாமா...
இளையதிலகம் பிரபு படங்களை எடுத்துக் கொண்டால் டைட்டில்களில் ஒரே மாதிரியான பெயர்கள் தொடர்ந்து வரும். சின்னத்தம்பி பெரியதம்பி, சின்னவர், சின்ன மாப்ளேன்னு பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த மாதிரி வேறு யாராவது படங்களில் நடிச்சிருக்காங்களா? இதுல எந்தப் படம் வெள்ளி விழா ஓடியதுன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ராலட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இது தான்...
ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட படங்களில் அதிகமா நடித்ததுன்னா அது பிரபு தான். அவர் நடித்த சின்னத்தம்பி பெரிய தம்பி உள்பட பல திரைப்படங்கள் வெற்றிகரமாக அமைந்தது. என்றாலும் சின்ன மாப்ளே படத்தின் வெற்றியை அந்தப் படங்கள் தொடவில்லை என்பது தான் உண்மை என்கிறார்.
சின்னத்தம்பி, சின்னப்பூவே மெல்லப்பேசு, சின்னவர், சின்ன வாத்தியார், சின்னத்தம்பி பெரியதம்பி ஆகியவை ஒரே மாதிரியாக அமைந்த பிரபுவின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1993ல் சந்தானபாரதியின் இயக்கத்தில் பிரபு நடித்த படம் சின்ன மாப்ளே. பிரபு, விசு, ராதாரவி, சுகன்யா, வினுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே பிரமாதம். வானம் வாழ்த்திட மேகம், வெண்ணிலவு கொதிப்பதென்ன, காட்டு குயில் பாட்டு, காதோரம் லோலாக்கு, கண்மணிக்குள் சின்ன சின்ன, அட மாமா நீ ஆகிய பாடல்கள் உள்ளன.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் பிரபு நடித்த சின்னதம்பி படமும் அதிக நாள்கள் ஓடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1991ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் சின்னத் தம்பி.
பிரபு, குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். தூளியிலே, போவோமா, அட உச்சந்தல, குயிலப் புடிச்சி, அரைச்ச சந்தனம், நீ எங்கே என் அன்பே ஆகிய பாடல்கள் உள்ளன.