பங்கு ரஜினிக்கு சொன்ன ஐடியாவை ஏன் ‘இந்தியன் 2’க்கு சொல்லல? கமலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

0
134
kamal rajini

மிக பிரம்மாண்டமாக தயாராகி சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படத்தில் கமலுடன் சேர்ந்து சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா போன்ற பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் தோன்றியிருந்தார்கள். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் மொத்தமாக காலி பண்ணியது இந்தியன் 2 திரைப்படம். அந்த அளவுக்கு படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.

அதுவும் ஷங்கரின் கெரியரில் இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலில் தோல்வியடைந்த படமாகவே கருதப்படுகிறது. படத்தில் மிகப்பெரிய மைனஸ் ஆக ரசிகர்களால் பார்க்கப்பட்டது என்னவெனில் முதலில் மியூசிக் இரண்டாவது படத்தின் நீளம். முதல் பாகத்தை பொருத்தவரைக்கும் ஏ ஆர் ரகுமானின் இசை படம் வேற லெவலில் சென்றது.

அதே மாதிரியான ஒரு தாக்கம் இந்த படத்தில் அமைந்ததா என்றால் இல்லை. ஆரம்பத்திலேயே படத்தின் நீளம் பற்றி படக்குழு சங்கரிடம் தெரிவித்த போது அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகுதான் ரசிகர்கள் அதை மிகப்பெரிய குறையாக பார்க்க சமீபத்தில் தான் படத்தில் இருந்து 20 நிமிட காட்சியை வெட்டி எடுத்திருக்கின்றனர்.

இதைப் பற்றி ரசிகர் ஒருவர் லென்ஸ் நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதாவது ‘படையப்பா படத்தின் புட்டேஜ் அதிகமானதால் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்திருப்பதாக கே எஸ் ரவிக்குமார் கமல்ஹாசன் இடம் தெரிவிக்க அதற்கு கமல் அதிகமாக இருந்தால் தேவையில்லாத காட்சிகளை வெட்டி எடுத்து விடுங்கள்.இரண்டாம் பாகம் மட்டும் எடுக்க வேண்டாம். இப்போது ரசிகர்களின் மனநிலையே மாறி இருக்கிறது’ என அறிவுரை கூறியிருந்தாராம்.

படையப்பா படத்திற்கு கூறிய அறிவுரையை ஏன் கமல் தன் படத்தில் பயன்படுத்தவில்லை என அந்த ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன் ‘ஏதோ ஒரு புள்ளியில் ஷங்கரும் கமலும் இந்த இந்தியன் 2 படத்தில் மயங்கி விட்டனர் என்று பதில் அளித்து இருந்தார்.

google news