இளையராஜா பயோபிக் இப்படித்தான் இருக்கும்!. நோ டவுட்!.. புட்டு புட்டு வைத்த பிரபலம்!..

இளையராஜாவின் வாழ்க்கையை அடிப்படியாக வைத்து உருவாகவுள்ள திரைப்படம் எப்படி இருக்க போகிறது என்பது பற்றி வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

தனுஷ் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் அவரது வாழ்க்கை குறிப்பில் எந்த விஷயங்கள் எல்லாம் உள்ளடக்கப்படும், எவை எவை சேர்க்கப்படாது என்பதெல்லாம் தற்பொழுது பேசும் பொருளாக மாறி வருகிறது. அவர் மற்றும் அவரது சகோதரர்கள் சினிமாவில் நுழைந்த விதம் மட்டுமே இடம்பெறுமா? அல்லது இளையராஜா பற்றிய காட்சிகள் மட்டும் இடம்பெறுமா என்கிற ஆர்வம் பலருக்கும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ‘கருப்பன்’ என்று சொல்லி விஜயகாந்தை வெறுத்த ராதிகா.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?!..

இசையில் தனது பங்கு மிகவும் முக்கியம் என்பது தெரிந்து பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு வந்தாரா இல்லை, அல்லது எல்லோரையும் போலவே இவரும் வந்தாரா? என்பதை படத்தில் எப்படி காட்டப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவரது வாழ்க்கை இன்று வரை முன்னேறத்துடிக்கும் பலருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறது.

படம் குறித்து பேசிய "வலைப்பேச்சு" பிஸ்மி ‘தனுஷுடைய தோற்றம் ஆரம்பகாலத்தில் இருந்த இளையராஜா போன்று இயற்கையாக அமைந்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடும் ஆற்றல் படைத்துள்ள தனுஷை தவிர வேறு யாரும் அவர் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியுமா? என யோசிக்க முடியவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்தை பார்த்து பயந்த படக்குழு!.. அசால்ட்டா டீல் செய்த நடிகர்!.. அட அந்த படமா?!..

இளையராஜாவின் இசையால் மட்டும்தான் அவருக்கு இந்த புகழும், மரியாதையுமே தவிர தனிப்பட்ட நபராக பார்த்தால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கே கிடையாது என்றும் சாடியிருந்தார். அதற்கு காரணம் அவர் நடந்து கொள்ளும் விதம்தான் என்று அடித்து கூறியுள்ளார். படத்தில் இளையராஜா அனுமதிக்கும் விஷயங்கள் மட்டுமே படமாக்கப்படும், அவர் பற்றிய எதிர்மறை காட்சிகள் எல்லாம் இப்படத்தில் இடம்பெறாது,

அவரது அரசியல் பிரவேசம் குறித்த காட்சிகளிலும் அவரை நியாயப்படுத்தும் விதமாகவே அமையக்கூடும். மாரிசெல்வராஜ் இப்படத்தை இயக்க விடாமல் இளையராஜா பார்த்துக்கொண்டார் எனவும், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக மாறிவிடும் என இளையராஜா யோசித்திருக்கலாம் என பிஸ்மி கூறியிருந்தார்.

 

Related Articles

Next Story