இப்பவும் கதை கேட்டு தூங்குறீங்களா?!.. அஸ்வினை கடுப்பாக்கிய நிருபர்!.. இது இல்லையா எண்டு!…

Published on: January 21, 2026
ashwin
---Advertisement---

ஒரு நடிகர் தன்னுடைய திரைப்படம் தொடர்பான ஒரு விழாவில் ஒரு சின்ன வசனத்தை பேசி அவரை ரசிகர்கள் மோசமாக ட்ரோல் செய்து பங்கம் செய்து மன உளைச்சலுக்கு ஆளான சம்பவம் என்றால் அது நடிகர் அஸ்வினைத்தான் சொல்ல வேண்டும். நடிகர் அஸ்வின் கோவையை சேர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். ஆபீஸ், ரெட்டைவால் குருவி, ராஜா ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் விழாவில் பேசிய அஸ்வின் ’40 கதைகளை கேட்டு தூங்கிவிட்டேன்’ என பேசியிருந்தார். அதை பலரும் ட்ரோல் செய்தார்கள். இது அஸ்வினை மனதளவில் மிகவும் பாதித்தது. அதன்பின் இப்போது வரை 4படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். நான் சாதாரணமாக சொன்ன ஒன்றை இவ்வளவு ஆழமாக ட்ரோல்ட் செய்து என்னை காயப்படுத்துகிறார்கள். கர்மா அவர்களை பார்த்துக்கொள்ளும்’ என அப்போது சொன்னர். சமீபத்தில் கூட ஊடகம் ஒன்றில் ‘அந்த காயம் என்னை விட்டு போகாது’ என்றெல்லாம் பேசினார் அஸ்வின்.

இந்நிலையில், ஒருவிழாவில் கலந்து அஸ்வினிடம் ஒரு செய்தியாளர் ‘இப்போதும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா? இல்லை முழித்துக் கொண்டீர்களா?’ என கேட்டார். இதைக் கேட்டு கடுப்பான அஸ்வின் ‘நான் கேள்வி கேட்டால் நீங்கள் நேர்மையாக பதில் சொல்வீர்களா? நீங்கள் 40 கதையை கேட்டால் தூங்க மாட்டீர்களா?.. தியேட்டரில் போய் பார்த்தால் எல்லாரும் தூங்கிகொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் ஒன்றும் பெரிய நடிகன் இல்லை இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன்.. ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கிறேன்.. எப்போதே பேசிய விஷயத்தை வைத்து இப்போதும் நீங்கள் என்னை கேள்வி கேட்டால் நீங்கள்தான் என்னை மனதளவில் குத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அஸ்வின்.