ஆபிஸ்பாய் மாதிரி டீ காபி வாங்கி வருவார்! அப்படி இருந்த தனுஷ்!.. செய்தியாளர் பகிர்ந்த் பகீர் தகவல்..
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்கராக வளர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என தொடர்ந்து மூன்று படங்களும் ஹிட் அடிக்கவே தயாரிப்பாளர்கள் க்யூவில் நின்றனர்.
மசாலா படங்களில் நடித்து வந்த தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஆடுகளம், புதுப்பேட்டை, அசுரன், கர்ணன் ஆகிய படங்களில சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். இப்போது அவர் ரூ.150 கோடிக்கு போயஸ்கார்டனில் வீடு கட்டும் அளவுக்கு முன்னேறியிருந்தாலும் அவரின் சிறுவயது காலம் அப்படி இருந்ததில்லை.
இவரின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா சில படங்களை தயாரித்து நஷ்டம் அடைந்ததால் அவரின் குடும்பமே வறுமையில் சிக்கியது. அதன்பின் கடைசி முயற்சியாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுத்தார். அந்த படம்தான் அவரின் வாழ்க்கையை மாற்றியது. அதன்பின் தொட்டதெல்லாம் பொன்னாகியது.
இந்நிலையில், பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘தி நகரில் கஸ்தூரி ராஜாவின் அலுவலகம் இருந்தது. அங்கு பத்திரிக்கையாளர் செல்வார்கள். அப்போது டவுசர் போட்டுக்கொண்டு சின்ன பையனாக தனுஷ் இருப்பார். ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ‘டேய் வெங்கட் பிரபு (தனுஷுன் நிஜப்பெயர்).. போய் காஃபி வாங்கி கொண்டு வா’ என்பார். தனுஷும் போய் வாங்கி வருவார். ஆனால், இப்போது தனுஷ் உச்சத்திற்கு சென்றுவிட்டார்’ என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆங்கிலம் தெரியாது என்ற கர்வத்தில் இருந்த தயாரிப்பாளர்!.. எண்ணத்தை தவிடு பொடியாக்கிய எம்ஜிஆர்..