1930களில் இருந்து 40கள் வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் பி.யு.சின்னப்பா. இவர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறுபவர்கள் உண்டு. இவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அதாவது தமிழ் சினிமாவில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் பி.யு.சின்னப்பாதான்.
திடீரென மயங்கி விழுந்த நடிகர்
பி.யு.சின்னப்பா, “சந்திரகாந்தா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து “அனாதை பெண்”, “மாத்ரு பூமி”, “உத்தமபுத்திரன்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து “ஆர்யமாலா”, “ஹரிச்சந்திரா”, “மங்கையர்கரசி”, “ரத்னக்குமார்” போன்ற பல திரைப்படங்களில் நடித்த பி.யு.சின்னப்பா 1951 ஆம் ஆண்டு ஒரு நாள் ரத்த வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்தார். அப்போதே அவரது உயிர் பறிப்போனது. அவருக்கு குடிபழக்கமும் புகைப்பழக்கமும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆர்டர் போட்ட கலெக்டர்
பி.யு.சின்னப்பா தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் என்பதால் புகழோடு சேர்ந்து அவருக்கு பணமும் கொட்டியது. ஆதலால் நிறைய சொத்துக்களை வாங்கிக்குவித்தாராம். குறிப்பாக தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கி குவித்தாராம். ஆதலால் அப்போது அந்த பகுதியில் கலெக்டராக இருந்தவர், “பி.யு.சின்னப்பாவிற்கு யாரும் வீடு விற்க கூடாது” என்று சட்டமே போட்டாராம்.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால், அந்த சொத்துக்கள் எல்லாம் பின்னாளில் அழிந்துபோனது. அவரது வாரிசுகள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்ந்து வந்தார்களாம்.
இதையும் படிங்க: மணிரத்னத்தை மரத்தடியில் கால்கடுக்க நிற்க வைத்த இளையராஜா… இப்படியெல்லாம் நடந்துருக்கா?
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…