Connect with us

Cinema History

80ஸ்…90ஸ்சில் வெளியான கல்லூரிப் படங்கள் – ஓர் பார்வை

கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்ட படங்களுக்கு எப்போதுமே கிரேஸ் அதிகம் உண்டு.

குறிப்பாக டி.ராஜேந்தரின் படங்களில் பெரும்பாலானவை கல்லூரி மாணவர்கள் நடித்த படங்களாகவே இருக்கும்.

அந்த வகையில் 80ஸ்சில் செம மாஸான கல்லூரி கதைக்களம் கொண்ட படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

உயிருள்ளவரை உஷா

UUU

டி.ராஜேந்தர் தயாரிப்பு, இசை, நடிப்பு, இயக்கம் என பல முகங்களைக் காட்டிய படம் உயிருள்ளவரை உஷா. 1983ல் வெளியானது. அவருடன் இணைந்து நளினி, எஸ்.எஸ்.சந்திரன், கங்கா, கவுண்டமணி, ராதாரவி, காந்திமதி, சரிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதிலும் கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜிக்கு…பாடல் மாஸ். உன்னைத்தானே, மோகம் வந்து, இந்திரலோகத்து, வைகை கரை காற்றே நில்லு, இதயமதை கோவில் என்றேன் ஆகிய மனது மறக்காத பாடல்கள் உள்ளன.

நிழல்கள்

nizhalagal

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இது ஒரு பொன் மாலை பொழுது, தூரத்தில் நான் கண்ட, மடை திறந்து, பூங்கதவே தாழ் திறவாய் ஆகிய சூப்பர்ஹிட் மெலடிகள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன. 1980ல் வெளியான இப்படத்தின் இயக்குனர் பாரதிராஜா.

இசை இளையராஜா. நிழல்கள் ரவி, சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். வைரமுத்துவின் முதல் பாடலான இது ஒரு பொன்மாலைப் பொழுது இந்தப்படத்தில் தான் வெளியானது.

ஒரு தலை ராகம்

ஈ.எம்.இப்ராகிம் தயாரித்து இயக்கிய இந்தப்படத்திற்கு கதை எழுதி, இசை அமைத்தவர் டி.ராஜேந்தர். இது கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியரின் காதல் பற்றிய கதை. சங்கர், ரூபா, சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். மலேசியா வாசுதேவன்

என் கதை, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும், கூடையிலே கருவாடு, மலேசியா வாசுதேவன், மன்மதன், நான் ஒரு ராசியில்லா ராஜா, வாசமில்லா மலர் இது ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. திரையில் ஓராண்டு ஓடிய வெற்றிச்சித்திரம் இது.

இதயம்

1991ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கதிர். முரளி தான் இந்தப்படத்தின் சூப்பர்ஹீரோ. அமைதியான நடிப்பில் மனதை கொள்ளை கொள்கிறார்.

அவருடன் இணைந்து நம்மை மகிழ்ச்சியில் மூழ்கடிப்பவர் ஹீரா. சின்னி ஜெயந்த், மனோரமா உள்பட பலரும் உள்ளனர். ஏப்ரல் மேயிலே, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, ஓ பார்ட்டி நல்ல, பூங்கொடி தான் பூத்ததம்மா, இதயமே இதயமே ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top