வடிவேலுவை தொடர்ந்து ரெட் கார்டு வாங்கப்போகும் காமெடி நடிகர்?... என்னப்பா பிரச்சனை!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு சரியான ஒத்துழைப்பு தராத காரணத்தினால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு மீதான தடை நீங்கியது. இதனை தொடர்ந்து “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் வடிவேலு ஒப்பந்தமானார்.
இதில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து முடித்த வடிவேலு தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலுவை தொடர்ந்து தற்போது சிக்கலில் சிக்கியுள்ள ஒரு பிரபல காமெடி நடிகர் குறித்தான ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது.
“கோலமாவு கோகிலா”, “எல்கேஜி”, “ஏ1”, போன்ற திரைப்படங்களின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் ரெடின் கிங்கஸ்லி. இவர் “நெற்றிக்கண்”, “டாக்டர்”, “பீஸ்ட்”, “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது காமெடியான வசன உச்சரிப்பு பல ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தற்போது ரெடின் கிங்கஸ்லி, ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் ரெடின் கிங்க்ஸ்லி மீது ஒரு புகாரை அளித்துள்ளார். அதாவது தான் தயாரித்த “லெக் பீஸ்” என்ற திரைப்படத்திற்காக கிங்க்ஸ்லி 10 நாட்கள் கால்ஷீட் தந்ததாகவும் ஆனால் அவர் நான்கு நாட்களே படப்பிடிப்பில் கலந்துகொண்டார் எனவும் அப்புகாரில் கூறியுள்ளார்.
மேலும் அப்புகாரில் “ரெடின் கிங்க்ஸ்லி இவ்வாறு தனது திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த தொகையை மீட்டுத் தரும் வரை ரெடின் கிங்க்ஸ்லி திரைப்படங்களில் நடிக்க தடை போடவேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வடிவேலுவை தொடர்ந்து ரெடின் கிங்க்ஸ்லி இது போன்ற சிக்கலில் மாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நடு ராத்தில கூட அட்ஜெஸ்ட் பண்ணனும்- பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பிய கமல் பட நடிகை…