தொடர்ந்து வடிவேலு மேல் வந்து விழும் புகார்கள்! - இந்த நடிகருக்கும் இப்படி ஒரு நிலைமையா?
வடிவேலு என்றாலே தமிழ் சினிமாவில் இவருக்கு இணை இப்போது வரை யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்பை பொறுத்தவரைக்கும் வடிவேலுவை அடிச்சுக்க யாருமே கிடையாது. ஒரு நடிகராக வடிவேலுவை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. அதோடு தன் உடல் மொழியாலே அனைவரையும் சிரிக்க வைப்பவர்.
அவருடைய இடைவேளி சினிமாவிற்கே ஒரு வெற்றிடமாகத்தான் அமைந்தது. திரும்பவும் ஒரு கம்பேக் கொடுத்தார்.ஆனால் முந்தைய ரீச்சை வடிவேலுவால் எட்ட முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் வடிவேலுவை பற்றி பல அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அதாவது கூட நடிக்கும் சக நடிகர்களை ஸ்கோர் செய்ய விடமாட்டார் என்றும் அதையும் மீறி அந்த நடிகர்கள் நன்றாக நடித்தால் இனி அவர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க மாட்டார் என்றும் அவருடன் நடித்த சக நடிகர்கள் பல பேட்டிகளில் கூறிவந்தனர்.
மரியாதை குறைவாக நடத்துவது என மிகவும் மோசமாகவும் நடந்து கொள்வார் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபாவில் பிரபலமானவர் நடிகர் சுவாமிநாதன். இவரும் பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார்.
விவேக்கை பற்றி கூறிய சுவாமிநாதன் விவேக் ஒரு லெஜெண்ட் என்றும் ஈகோ இல்லாத மனிதர் என்றும் அவர் இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். மேலும் வடிவேலுவை பற்றி கூறும் போது யாரையும் ஒழுங்காக நடிக்க விட மாட்டார் என்றும் ‘ஆறு’ படத்தில் அவருடன் நடித்து நல்லா மாட்டிக் கொண்டேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : அந்த விஷயத்தில் கமலை விட கேப்டனுக்குத்தான் முதலிடம்! தெரியாமல் மாஸ் காட்டிய சம்பவம்
மேலும் கூறிய அவர் கூட நடித்த சக நடிகர்கள் நல்லா வரவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய வாய்ப்பை வாங்கித்தர வேண்டும் என்றும் கூறினார். இதெல்லாம் வடிவேலுவிடம் கிடையாது என்பது போல பேசினார் சுவாமிநாதன்.