கலைஞரின் நாடகத்தை உருவி படமாக உருவாக்கிய கண்ணதாசன்! கொந்தளித்த முத்தமிழ் அறிஞர் என்ன செய்தார் தெரியுமா?
கலைஞர் கருணாநிதியும் கவியரசர் கண்ணதாசனும் மிக நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தவர்கள். எனினும் பின்னாளில் கருத்து வேறுபாடு காரணமாக மாறி மாறி விமர்சித்துக்கொண்டார்கள். குறிப்பாக கண்ணதாசன் தனக்கு கிடைத்த ஒவ்வொரு மேடையையும் கலைஞரை தனது அழகு தமிழால் திட்டவே பயன்படுத்தினார். எனினும் கண்ணதாசன் தன்னை அழகு தமிழில் திட்டியதை கலைஞர் மிகவும் ரசித்தார் என்பதுதான் உண்மை. அந்தளவுக்கு இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தது.
காப்பியடித்த கண்ணதாசன்?
இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஒரு கதை விஷயத்தில் விரிசல் எழுந்தது. அதுதான் இவர்களுக்குள் எழுந்த முதல் விரிசல் என்று கூறப்படுகிறது. அந்த விரிசல் எதனால் எழுந்தது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1954 ஆம் ஆண்டு கண்ணதாசன் கதை-வசனத்தில் வெளியான திரைப்படம் “சுகம் எங்கே”. இத்திரைப்படத்தை கே.ராம்நாத் என்பவர் இயக்கியிருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.
இத்திரைப்படம் வெளிவந்தபோது ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது இத்திரைப்படத்தின் கதை, கலைஞர் நாடகமாக எழுதிய “அம்மையப்பன்” என்ற நாடகத்தின் காப்பி என கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கண்ணதாசன் மறுத்து வந்தார்.
முதல் விரிசல்
எனினும் தன்னுடைய நாடகத்தை இப்படி உருவி வேறு மாதிரி திரைக்கதை அமைத்து படமாக எடுத்திருக்கிறார்களே என்று கொந்தளித்த கலைஞர், அதன் பின் அதே ஆண்டில் “அம்மையப்பன்” நாடகத்தை திரைக்கதையாக எழுதினார். அத்திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.பீம்சிங் இயக்கியிருந்தார். ஆனால் “அம்மையப்பன்” திரைப்படம் படுதோல்வியடைந்ததாம்.
இந்த கதை விஷயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்தான் கண்ணதாசன் மற்றும் கலைஞருக்கு ஏற்பட்ட விரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த படத்துக்கு ரோட்டுல நின்னு ட்ரெஸ் மாத்துனாங்க !.. படப்பிடிப்பில் மீனாவிற்கு நடந்த சம்பவம்…