அடக் கன்றாவியே.. குக் வித் கோமாளி பிரபலம் என்ன இப்படி இறங்கிட்டாரே.. புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காம்!..

Published on: October 21, 2023
---Advertisement---

விஜய் டிவி பிரபலங்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக ஷைன் ஆகாத இருந்து வந்த நடிகை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

விஜய் டிவியின் காமெடி குக்கிங் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டவர் தான் சுனிதா கோகோய்.

இதையும் படிங்க: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் அப்படியே பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருப்பார். அதன் பின்னர் சாந்தனு நடித்த சித்து பிளஸ் டூ படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதன் பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத நிலையில், விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அப்படியே விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்றவர் தனது நகைச்சுவைத் திறன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஷாக்கிங்!.. சுனைனாவுக்கு என்ன ஆச்சு?.. மருத்துவமனையில் இந்த கோலத்தில் இருக்காரே!..

விஜய் டிவியில் இடம்பெறும் பல ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்தவர், தற்போது லெஸ்பியனாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். FLAKKA (ஃபிளாக்கா) எனும் தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சுனிதா வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு மாஸ்டர் பீஸ் படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பெருமையான விஷயம் என்றும் கூடிய விரைவிலேயே தன்னுடைய போல்ட் அவதாரத்தை ரசிகர்கள் காண போகின்றனர் என்றும் திறமையான இயக்குனர் ரஜித் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார்.

FLAKKA படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் துப்பாக்கி வைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பது போல சுனிதா கோகோய் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.