Connect with us

Cinema News

நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முதல் நாளில் ரெக்கார்டு பிரேக்கிங் வசூல் செய்த நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று விடுமுறை தினம் இல்லாததால் படத்தின் வசூல் இந்தியாவில் பாதியாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ரசிகர்கள் முண்டி அடித்துக்கொண்டு முதல் நாளில் தளபதியை பார்த்து விட வேண்டும் என்கிற வெறியில் திரையிட்ட அனைத்து திரையரங்குகளையும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாற்றி அதிக வசூலை வாரிக் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிவாஜி மட்டும் அத செஞ்சிருந்தா வேறலெவல் போயிருப்பார்!.. நிறைவேறாம போன அண்ணாவின் ஆசை…

முதல் நாள் வசூல் 140 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வசூல் 148.5 கோடி என தயாரிப்பு நிறுவனம் மாநில வாரியாகவும் லியோ திரைப்படம் செய்த வசூல் சாதனையை தனியாக பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 12 கோடி ரூபாய் வசூலை கேரளாவில் வலியோ செய்துள்ளது. 14 கோடி ரூபாய் வசூலை கர்நாடகாவில் செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 16 கோடி ரூபாய் வசூலையும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 34 கோடி வசூலையும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் 4 கோடி ரூபாய் வசூலையும் லியோ செய்திருக்கிறது.

இதையும் படிங்க: கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர்!.. விஜயோட ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?..

உலக அளவில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் செய்தது என்கிற விவரத்தையும் தெளிவாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், முதல் நாளில் இந்தியாவில் 68 கோடி வசூல் ஈட்டிய லியோ இரண்டாம் நாளான நேற்று இந்தியா முழுவதும் 34 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பு அதற்கு மேல் இருக்க வாய்ப்புகள் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு நாட்களில் லியோ இந்தியாவில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை இருக்கும் நிலையில் உலக அளவில் லியோ படத்தின் வசூல் முதல் வாரத்திலேயே 400 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக லியோ படத்தின் வசூல் முதல் வாரத்திற்கு பிறகு எப்படி இருக்கும் என்பதை பொறுத்துத்தான் அது ஜெயிலரை முந்துமா என்பது தெரியவரும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top