Connect with us
vijay

Cinema News

கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர்!.. விஜயோட ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?..

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் ஒரு வெற்றிப்படம் கொடுத்தால் அப்படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு கார், தங்க செயின் போன்ற பரிசுகளை கொடுப்பதை கடந்த பல வருடங்களாகவே பார்த்து வருகிறோம். வாலி படம் உருவானபோது அஜித் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பைக் ஒன்றை வாங்கி கொடுத்தார். வாலி படம் சூப்பர் ஹிட் அடித்ததும் அவருக்கு ஒரு காரையும் பரிசாக வாங்கி கொடுத்தார்.

அந்த காலகட்டத்தில் அஜித்தை தவிர வேறு எந்த நடிகரும் அதை யாரும் செய்யவில்லை. ரஜினி நல்ல படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு தங்க செயின் பரிசளிப்பார். இயக்குனர் சேரனுக்கு கூட ஒருமுறை தங்க செயின் ஒன்றை பரிசளித்தார். அதன்பின், சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அதை செய்தனர்.

இதையும் படிங்க: ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?!.. கொஞ்சம் கதைக்கும் செலவு பண்ணியிருக்கலாம்!..

ஜெயிலர் படம் மெகா ஹிட் அடித்து பல நூறு கோடி லாபத்தை கொடுத்ததால் ரஜினிக்கு கொடுத்த சம்பளம் இல்லாமல் ரூ.30 கோடியையையும், ஒரு விலை உயர்ந்த சொகுசு காரையும் பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன். அதேபோல், நெல்சனுக்கும் ரூ.5 கோடி செக் மற்றும் கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். அனிருத்துக்கு ரூ.2 கோடி கொடுத்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை லலித்குமார் தயாரித்திருந்தார். கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகளுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டு இப்படம் வெளியானது. கொரோனாவுக்கு பின் ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்களா என்கிற பயத்தில் இருந்த திரையுலகத்திற்கு உற்சாகமும், நம்பிக்கையும் கொடுத்த படமாக மாஸ்டர் இருந்தது.

இதையும் படிங்க: நான் நடிக்க மாட்டேன்.. லோகேஷிடம் மல்லுக்கட்டும் ராகவா லாரன்ஸ்!.. பிளாப் கொடுத்தும் அடங்கலயே…

இப்படம் நல்ல வசூலை பெற்றதால் தயாரிப்பாளர் லலித்குமார் விஜயிடம் ‘உங்களுக்கு அன்பளிப்பாக நான் எதாவது கொடுக்கட்டுமா?’ என கேட்க, விஜயோ ‘எனக்கான சம்பளத்தை கொடுத்துவிட்டீர்கள்.. அதுவே போதும்.. அன்பளிப்பு எதுவும் தேவையில்லை’ என்று சொல்லிவிட்டாராம். இந்த லலித்குமார்தான் இப்போது லியோ படத்தையும் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் ஊடகமொன்றில் பேசிய லலித்குமார் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். இவரின் தயாரிப்பில் இப்போது வெளியாகியுள்ள லியோ திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எல்லா ரெக்கார்டும் காலி!.. நிஜமாவே நம்பர் ஒன் என நிரூபித்த விஜய்.. லியோ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

google news
Continue Reading

More in Cinema News

To Top