Connect with us
leo

Cinema News

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?!.. கொஞ்சம் கதைக்கும் செலவு பண்ணியிருக்கலாம்!..

Leo: கடந்த சில தினங்களாகவே எல்லோரும் அதிகம் பேசிக்கொண்டிருந்த லியோ திரைப்படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே இப்படம் தொடர்பான செய்திகளே ஊடகங்களில் அதிக இடம் பிடித்தது. விக்ரம் எனும் மெகா ஹிட்டுக்கு பின் லோகேஷ் இயக்கும் படம் என்பதாலும், மாஸ்டருக்கு பின் விஜயுடன் லோகேஷ் கூட்டணி அமைத்ததாலும் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.

லோகேஷ் இதற்கு முன் கேங்ஸ்டர் படங்களை இயக்கியதாலும், அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் தரமாக இருப்பதாலும் ஒரு பக்கா ஆக்‌ஷன் ட்ரீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதோடு, ஒருபக்கம் இந்த படமும் லோகேஷின் ஸ்டைலில் எல்.சி.யூ என பலரும் கிளப்பிவிடவே அதனாலும் எதிர்பார்ப்பு எகிறியது.

இதையும் படிங்க: எல்லா ரெக்கார்டும் காலி!.. நிஜமாவே நம்பர் ஒன் என நிரூபித்த விஜய்.. லியோ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய் இது போன்ற வேடத்தில் நடித்ததையும், விஜய் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து இப்படி ஒரு கதையை யோசித்த லோகேஷ் கனகராஜை பாராட்டலாம் என்றாலும், படத்தின் 2ம் பாதியில் திரைக்கதை சரியாக அமையவில்லை எனவும் பரவலாக சொல்லப்படுகிறது.

அதேநேரம் இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் அன்பு – அறிவு எனும் இரட்டையர்கள்தான். கடந்த சில வருடங்களாக திரையுலகில் பிரபலமாகி வரும் இவர்கள் இருவரும் கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர், விக்ரம் போன்ற பல பெரிய படங்களில் சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர்.

இதையும் படிங்க: லியோல செஞ்ச தப்ப இனி செய்யக் கூடாது! உஷாரா முரட்டு வில்லன தட்டித் தூக்கிய லோகேஷ் – மிரள வைக்கும் ரஜினி171

லியோ படத்தின் ஹீரோவே இவர்கள்தான். சண்டை காட்சிகள் மட்டுமில்லாமல் மற்ற சில காட்சிகளுக்கும் அவர்களை தன்னுடன் வைத்து அவர்களின் ஆலோசனையும் கேட்டே விஜய் நடித்தாராம். பொதுவாக சண்டை காட்சிகளில் மட்டுமே ஸ்டண்ட் இயக்குனர்கள் இருப்பார்கள். ஆனால், விஜய் கேட்டதால் அவர்கள் மற்ற காட்சிகளிலும் கூடவே இருந்து செய்து கொடுத்துள்ளனர்.

anbarivu

இதற்காக அவர்களுக்கு ரூ.7 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதற்கு முன்பே இவர்களுடன் நெருக்கமாக பழகியவர். அவர்களின் அலுவலகத்தில்தான் பெரும்பாலான நேரத்தை செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்க்கே படம் பிடிக்கலையா!.. கடைசி வரை லியோவை கண்டுக்காமல் விட காரணமே அதுதானா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top