Categories: latest newstelevision

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி’யில் தாமுவுடன் இணையப்போகும் பிரபலம்! இந்த ஹீரோவா?

Cook with Komali: விஜய் டிவி மக்களை கவர்வதற்கு புது புது நிகழ்ச்சிகளை நடத்தி எப்படியாவது ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே வருகின்றன. விடுமுறை நாள் என்றாலே அனைவரும் விஜய் டிவி முன் உட்கார்ந்து விடுவார்கள். அந்தளவுக்கு பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது. அந்த வகையில் மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தமுள்ளவகையில் இந்த நிகழ்ச்சியில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருந்து ஒரு சில பிரபலங்கள் குக்காகவும் காமெடி கலைஞர்கள் கோமாளியாகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரகளை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..

4 சீசன்களை கடந்து வெற்றிகரமாக பயணித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இப்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கின்றது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமுவும் வெங்கட் பட்டும் இருந்து வந்தனர். தொகுப்பாளராக ரக்‌ஷன் இருந்து வந்தார். இதற்கிடையில் செஃப் வெங்கட் பட் திடீரென தனது இணையதள பக்கத்தின் மூலமாக இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்திருந்தார்.

அவரை அடுத்து செஃப் தாமுவும் நானும் வெங்கட் பட்டும் இணைந்து வேறொரு நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திக்க இருக்கிறோம் என்று அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஒரு திடீர் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் தாமு தொடர இருப்பதாகவும் அவருடன் ஒரு ஹீரோவும் சேர்ந்து நடுவராக வர இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: வேற கதையே இல்லையா?!. ஓடிப்போ!.. ரஜினி, விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த இயக்குனர்!..

அவருடைய புகைப்படத்தை முழுவதுமாக காட்டாமல் ஒரு பக்க புகைப்படத்தை மட்டும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது மாதம்பட்டி ரெங்கராஜ்ல என கமெண்ட்டில் கூறி வருகிறார்கள். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தவர். பல பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு இவர்தான் செஃப். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அழைத்து வந்திருக்கிறார்களோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Rohini

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

6 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

7 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

8 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

21 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago