“பிக் பாஸ்ன்னா பெரிய இதுவா??”… கொந்தளிக்கும் கூல் சுரேஷ்… இப்போ அப்படி என்ன கேட்டுட்டாங்க??
மக்களிடையே நல்வரவேற்பை பெற்ற ‘பிக் பாஸ்” நிகழ்ச்சியின் சீசன் 6 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளிலேயே வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடையே காரசாரமான சண்டை எழுந்தது.
இதற்கு முந்தைய சீசன்களில் எப்போதும் கிட்டத்தட்ட 30 நாட்கள் கழித்துதான் இது போன்ற சம்பவங்கள் நிகழும். ஆனால் இந்த சீசனில் உள்ளே வந்தவுடனே ஆரம்பித்துவிட்டார்கள். இது கமல்ஹாசனுக்கே வியப்பை அளித்துள்ளது.
மேலும் முந்தைய சீசன்களை போல் அல்லாமல், இந்த சீசனில் பல புதிய சவாலான போட்டிகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த சீசனில் ஆட்டம் சூடிபிடித்துள்ளது. வந்த முதல் நாளே பல கடுமையாக டாஸ்க்குகளை கொடுத்தார் பிக் பாஸ். ஆதலால் முந்தைய சீசன்களை விட இது மிகவும் சுவாரஸ்யமாகச் செல்வதாக பலரும் கூறுகின்றனர்.
மேலும் இந்த சீசனில் அதிகம் பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். முந்தைய சீசன்களில் இது போன்று அதிக போட்டியாளர்கள் இல்லை. ஆதலால் மொத்தமுமாக இந்த சீசனே மிகவும் புதுமையோடு இருப்பதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இந்த சீசனில் ஜிபி முத்து கலந்துகொண்டுள்ளார். ஜிபி முத்துவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் “ஜிபி முத்து ஆர்மி” போன்ற குழுக்களை எல்லாம் சமூக ஊடகங்களில் உருவாக்கிவிட்டார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் கூல் சுரேஷ், பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது நிருபர் ஒருவர் “ஜிபி முத்து பிக் பாஸுக்குள் சென்றிருக்கிறார். உங்களை கூப்பிடவில்லையா?” என கேட்டனர்.
அதற்கு கூல் சுரேஷ் “தயவு செய்து பிக்பாஸை பற்றி பேசாதீங்க. எனக்கு அந்த வார்த்தையை கேட்டாலே உள்ளே கொதிக்கிறது” என கூறினார். மேலும் பேசிய அவர் “என்ன பெரிய பிக்பாஸு? சின்ன சின்ன பெண்களை அரையுங்குறையுமாக ஆடவிடுகிறார்கள். இதெல்லாம் பார்ப்பதற்காக என்னை பிக் பாஸுக்கு போகச் சொல்லுகிறீர்களா? நான் எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்” எனவும் கொந்தளித்து பேசினார். கூல் சுரேஷ் இவ்வாறு கொந்தளித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.