Connect with us
cool

Biggboss Tamil 7

பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பும் கூல் சுரேஷ்! அதிரடியாக நடந்த டாஸ்க்கில் ஏற்பட்ட உச்சக்கட்டம்! – வெளியான ப்ரோமோ

BiggBoss Season 7: தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கி வருகிறது. ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் பயணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று பேர் வெளியேற்றப்பட்டு புதுசாக வைல்டு கார்டு எண்டிரியாக மேலும் புதிய 5 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.இதில் நேற்று நடந்த எபிஷோடில் வந்த ஐந்து போட்டியாளர்களையும் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் சேர்ந்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: உருவத்துக்காக நிராகரிக்கப்பட்ட நடிகர்!.. இப்போது மாஸ் சீன்களில் அசத்தும் ஜார்ஜ் மரியான்!..

வந்த உடனேயே விஜே அர்ச்சனாவை அழ வைத்து பிக்பாஸ் வீட்டார்கள் வேடிக்கை பார்த்தனர். ரஃபாக இருந்த பிரதீப் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சேர்ந்து அவருடைய கொள்கையில் இருந்து விலகி விட்டதாகவே தெரிகிறது. கேப்டனாக செயல்படும் பூர்ணிமாவும் பச்சோந்தி வேலையை பார்த்து வருகிறார்.

கடந்த இரு தினங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு வித கசப்பான உணர்வையே ஏற்படுத்தி வருவதாக ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்டில் இருந்து தெரிகிறது. இதற்கிடையில் இன்று ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: சிலுக்குக்கே டஃப் கொடுக்க நினைத்த பிரபல நடிகை… ஆமாம்பா… உண்மையிலேயே செம போட்டிதான்…

இன்று நடைபெறும் ஒரு டாஸ்க்கில் பிரதீப்பிற்கும் கூல் சுரேஷிற்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை வருகிறது. கூல் சுரேஷை பிரதீப் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளால் தாக்குவது மாதிரி பேச கோபப்பட்ட கூல் சுரேஷ் தனது உடைமைகளை சுருட்டிக் கொண்டு நான் கிளம்புகிறேன் என பிக்பாஸ் மெயின் கேட் வாசல் முன் நிற்பது மாதிரியான காட்சி அந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. அப்படி என்ன டாஸ்க் ? என்ன பேசினார் பிரதீப் என்பது இன்றைய எபிஷோடில் தெரியவரும்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top