Connect with us
george

Cinema News

உருவத்துக்காக நிராகரிக்கப்பட்ட நடிகர்!.. இப்போது மாஸ் சீன்களில் அசத்தும் ஜார்ஜ் மரியான்!..

George maryan : கடந்த 10 வருடங்களாக திரைப்படங்கள் சீரியஸ் மற்றும் காமெடி காட்சிகளில் கலக்கி வருபவர் ஜார்ஜ் மரியான். மிகவும் அற்புதமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதற்கு என்ன தேவையை அதை அழகாக கொடுக்கும் நடிகர் இவர். அதனால்தான் இயக்குனர்கள் இவரை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

கலகலப்பு படத்தில் மண்டையில் அடிபட்டு மேலே தொங்கிக்கொண்டு சினிமாவில் ஹீரோக்கள் பேசிய வசனங்களை பேசி சிரிக்க வைத்த ஜார்ஜ்தான், கைதி படத்தில் முக்கிய வேடத்தில் வில்லனையே அடித்து துவம்சம் செய்வார். சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க: சிலுக்குக்கே டஃப் கொடுக்க நினைத்த பிரபல நடிகை… ஆமாம்பா… உண்மையிலேயே செம போட்டிதான்…

இவரின் சொந்த ஊர் விளாத்திக்குளம். பிளஸ் டூ முடித்தபின் சென்னை லையோ கல்லூரி சார்பாக நடக்கும் வீதி நாடகங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் கூத்துப்பட்டறைக்கு சென்றார். 1980ம் வருடம் முதல் 2002ம் வருடம் வரை 22 வருடங்கள் கூத்துப்பட்டறையில் சுமார் 120 நாடகங்களில் ஜார்ஜ் நடித்திருக்கிறார். நாசர் இயக்கி நடித்து 2002ம் வருடம் வெளியான ‘மாயன்’ படத்தில் ஜார்ஜ் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். இயக்குனர் ஏ.எல்.விஜய் இவரை தனது பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம் சைவம், தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடிக்க வைத்தார். எல்லாமே அற்புதமான வேடங்கள்.

george

ஜார்ஜ் முதன் முதல் சரத்குமார் போலீஸாக நடித்த கம்பீரம் படத்தில்தான் நடிக்கத்தான் அழைக்கப்பட்டார். ஆனால், படப்பிடிப்பில் இவரை பார்த்த இயக்குனர் ‘உயரம் குறைவாக இருக்கிறார். சரத்குமாருக்கு அருகில் இவரை எப்படி போலீஸாக நிற்க வைப்பது?’ என சொல்லி ரிஜெக்ட் செய்தார். ஆனால், சினிமாவில் இவர் அதிகம் நடித்தது போலீஸ் அதிகாரி வேடத்தில்தான்.

இதையும் படிங்க: பாவம் லாஸ்லியாவுக்கு பேன்ட் வாங்குறதுக்காவது ஒரு பட வாய்ப்பு கொடுங்க!.. பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!..

மதராசப்பட்டிணம் படத்தில் ஆர்யா குரூப்பிடம் மாட்டிக்கொண்டு ‘எ…ஏ..பி..பீ’னு இவர் சொல்லி கொடுப்பதை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். சைவம் படத்தில் ஆங்கிலம் தெரியாமல் முழிப்பது, கலகலப்பு படத்தில் மேலே தொங்கிக்கோண்டு தங்கப்பதக்கம் சிவாஜி முதல் சிங்கம் சூர்யா வரை போலீஸ் மாடுலேஷனனில் வசனங்களை பேசி தெறிக்கவிட்டிருப்பார்.

george

கைதி படத்திற்கு முன் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படம் அவருக்கு முக்கிய துவக்கம் சென்றே சொல்ல வேண்டும். ‘நீங்கதான் கமிஷனர் ஆபீசை பார்த்துக்கணும்’ என மேலதிகாரி சொன்னவுடனே போலீஸ் யூனிபார்மை போட்டுக்கிட்டு ஓடி வருவதாகட்டும், ‘கதவை இழுத்து மூடுங்கடா’ என கத்துவதாகட்டும், அங்கிருக்கும் வாலிபர்களிடம் ‘டேய் பசங்களா உங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.. ஆனா இந்த பொண்ணுக்கு எதுவும் ஆகக் கூடாதுடா’ என சொல்லும்போது அவரே படத்தின் ஹீரோவாகவே மாறியிருப்பார்.

இதுபோல தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து ரசிகர்களை ஜார்ஜ் மரியான் மகிழ்விப்பார் என வாழ்த்துவோம்!…

இதையும் படிங்க: லியோ, ஜெயிலர்லாம் வேஸ்ட்!.. நிஜமாவே இந்த படங்கள் தான் கெத்து!.. ப்ளூ சட்டை மாறன் போட்டு பொளக்குறாரே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top