Connect with us

Cinema News

குடிச்சிட்டு வண்டி ஓட்டாத!. சிவாங்கியை அசிங்கப்படுத்திய கூல் சுரேஷ்!.. வந்து இப்படி மாட்டிக்கிட்டாரே!..

நடிகர் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் நோக்கில் கூல் சுரேஷை பயன்படுத்தி உள்ளார் நடிகர் சந்தானம். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் புரமோஷனுக்காக சாலையில் இறங்கிய கூல் சுரேஷிடம் குக் வித் கோமாளி சிவாங்கி வசமாக வந்து சிக்கிக் கொண்டது தான் இன்றைய ஹைலைட்டாக மாறி உள்ளது.

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி என விஜய் டிவி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார் சிவாங்கி.

குக் வித் கோமாளி செட்டில் இவர் செய்யும் அலப்பறையை பார்த்து ஏகப்பட்ட மக்கள் இவருக்கு ரசிகரான நிலையில், குடிச்சிட்டு வண்டி ஓட்டாத சிவாங்கி என சொல்லி கூல் சுரேஷ் இவரது சோலியை முடித்து விட்டார்.

கூல் சுரேஷிடம் சிக்கிய சிவாங்கி:

சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்தர், முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகி உள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்திற்கு டிடி ரிட்டர்ன்ஸ் என பெயர் வைத்துள்ள நிலையில், டிடிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அர்த்தம் கேட்டபோதே டிரிங்க் அண்ட் டிரைவ்னு கூட சொல்லலாம் என சந்தானம் பேசியிருந்தார்.

இந்நிலையில், டிரிங்க் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது என டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் பேனர் உடன் சாலையில் இறங்கிய கூல் சுரேஷிடம் தொக்கா வந்து சிக்கி விட்டார் நம்ம சிவாங்கி. காரில் சாலையில் வந்துக் கொண்டிருந்த சிவாங்கியை பார்த்ததுமே மடக்கிய கூல் சுரேஷ், சீட் பெல்ட் ஏன் போடவில்லை எனக் கேட்டு கலாய்த்து விட்டார்.

சீட் பெல்ட் போடுங்க சிவாங்கி:

சீட் பெல்ட் போடாமல் காரில் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு வந்த சிவாங்கியை பார்த்த கூல் சுரேஷ், ஒரு செலிபிரிட்டியா இருந்துக் கொண்டு நாமே சீட் பெல்ட் போடலைன்னா எப்படி சிவாங்கி, எப்போதும் சீட் பெல்ட் போடுங்க என்றும் சீட் பெல்ட் போடாமல் வந்ததற்கு ஸாரி சொல்லுங்க என்றும் அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.

வண்டி டிராபிக் ஆகுது, போகணும் என சிவாங்கி சொல்லி எஸ்கேப் ஆக நினைத்தாலும் விடாமல் தொடர்ந்து சந்தானத்தின் டிரிங்க் அண்ட் டிரைவ் படத்தின் பேனரை காட்டி சிவாங்கியிடம் பேசினார்.

டிரிங்க் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது:

மேலும், சீட் பெல்ட் உடன் நிறுத்தாமல், டிரிங்க் அண்ட் டிரைவ் பண்ணாதீங்க சிவாங்கி என சைக்கிள் கேப்பில் சிவாங்கியை ஒட்டுமொத்தமாக நடுரோட்டிலேயே அசிங்கப்படுத்தி விட்டார் கூல் சுரேஷ், அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

என்னது சிவாங்கி டிரிங்க் அண்ட் டிரைவ் பண்ணாங்களா? என்றே ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் வீடியோக்களை போட ஆரம்பித்து விட்டனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top