கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், ஆதிக் ரவிச்சந்திரன்… யாருடன் ரஜினியின் அடுத்த காம்போ?

karthick subbaraj, mariselvaraj, rajni, athik ravichandar
ரஜினி மார்க் அன்டனி, குட்பேட் அக்லி புகழ் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி அமைக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டும் அல்லாமல் கூலி படத்தின் அப்டேட்டுகளையும் பற்றி மூத்த பத்திரிகையாளர் சுபையர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா..
ஜேம்ஸ்பாண்டு பாணி கதை அதாவது தங்கக் கடத்தல். அதுபோன்ற தழுவல்தான். டீசர் எல்லாம் போகும்போது அப்படித்தான் இருக்கு. லோகேஷ் பிறந்தநாள் அன்று டிரெய்லர் லாஞ்ச் பண்ணலாம்னு நினைச்சாங்க. ஆனா போஸ்ட் புரொடக்ஷன் வேலை பிசியா போய்க்கிட்டு இருக்கு. அதனால அடுத்த மாதம் ஒரு அப்டேட் வர வாய்ப்பு இருக்கு. படத்துக்குப் பெரிய பிசினஸ். ஓடிடில போட்டி போட்டு வாங்க பிசினஸ் நடந்துக்கிட்டு இருக்கு.
இது ஒரு பேன் இண்டியா படம். லோகேஷ், நெல்சன் யாரா இருந்தாலும் வேற மொழியில் இருந்து நடிகர்களைப் போட்டுருக்காங்க. ஜெயிலர் 2வை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. லோகேஷ் இயக்குறதால அந்த எதிர்பார்ப்பு.
வரக்கூடிய சீன்ஸ், போஸ்டர், டீசர் எல்லாம்கூட படத்துக்கு மிகப்பெரிய ஹைப்பைக் கொடுத்துருக்கு. சன் பிக்சர்ஸைப் பொருத்தவரைக்கும் புரொமோட் பண்றதுக்கு அவங்களை அடிச்சிக்க முடியாது. இந்தப் படத்துல ரஜினியோட பேரு பற்றி இன்னும் வரல. அதை சஸ்பென்ஸா வச்சிருக்காங்க. போஸ்ட் புரொடக்ஷன் கூட வழக்கமா பண்ற இடத்துல கூட பண்ணல. ரொம்ப பாதுகாப்பா பண்றாங்க.
ஏற்கனவே ஒரு சீன் லீக்கானதால எதுவுமே அப்டேட் வராதவாறு பார்த்துக்குறாங்க. முழுக்க முழுக்க டைரக்டர் என்ன சொல்றாரோ அதைக் கேட்கக் கூடியவர்தான் ரஜினி. விஜயகாந்தும் அப்படிப்பட்டவர்தான். புது இயக்குனருன்னா கூட அவங்களுக்கான முழு சுதந்திரம் கொடுப்பார்.
அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் ரஜினிக்கிட்ட பேசிருக்காங்க. ஆனா இன்னும் ஃபைனல் ஆகல. ரஜினிகாந்த் பயோபிக்கை புத்தகமாகப் போடப்போறாரு. அதனால 3 மாசத்துக்குள்ள வேகமா ஜெயிலர் 2 படத்துல நடிச்சிக்கிட்டு இருக்காரு. அஜீத்துக்கு ஆதிக்கின் படம் ஹிட்டுன்னா அடுத்து அவரை விட மாட்டாரு. அடுத்த படத்துக்கும் அவரைத்தான் இயக்கச் சொல்வாரு.
மற்றபடி ரஜினியுடன் இன்னும் இணையறதா பேச்சு வரல. கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை இளமையாக ஸ்டைலிஷா காட்டுவாரு. அவரு சொன்ன கதை ஒண்ணும் சரியா வரல. அதனால எந்தளவு அடுத்தடுத்த பிராசஸ் போதுன்னு தெரியல. இப்போ குட் பேட் அக்லி அப்டேட் போய்க்கிட்டு இருக்கு. அதனால தனித்து வரணும்கறதுக்காக அடுத்த மாதம் கூலி படத்துக்கு அப்டேட்ஸ் வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.