கூலியில் நடித்த ரஜினியைக் காப்பாற்றியது யாருன்னு தெரியுமா? அட இது புதுசா இருக்கே..!
தலைவர் 171 என்ற பெயரில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படத்திற்கு கூலி என்று பெயர் இட்டார்கள். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷாகிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.
படத்தில் டிஸ்கோ என்ற அனிருத்தின் டிராக் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பழைய பாடலான டி ஐ டிஸ்கோ பாடலைத் தூசுதட்டி ரீமிக்ஸில் போட்டுள்ளார் அனிருத். இதற்காக இளையராஜா ரஜினி படப் பாடலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் விட்டு இருந்தார்.
அது பலத்த சர்ச்சையையும் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தங்கமகன் படத்துக்காக இளையராஜா இசை அமைத்த வா வா பக்கம் வா என்ற பாடல் தான். இதில் தான் டிஐஎஸ்சிஓன்னு சொல்லிட்டு டிஸ்கோ டிஸ்கோன்னு வரிகள் வரும். மியூசிக்கும் அதே தான்.
இந்த விவகாரம் குறித்து ரஜினியிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அது இளையராஜாவுக்கும், தயாரிப்பாளருக்கும் உண்டானது. படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அப்போது தெரிவித்து இருந்தார்.
துறைமுகத்துல ரஜினி கூலியா நடிக்கிறாரு. இதே மாதிரி தான் அமிதாப்பச்சனும் கூலி படத்துல நடிச்சாரு.
Also read: ரஜினியும் கமலும் மீண்டும் சேர்ந்து நடிக்கிறாங்க! என்ன விஷயம் தெரியுமா?
அதுல அவரு கைல ஒரு பட்டையைக் கட்டியிருப்பாரு. அதுல 786ன்னு போட்டுருக்கும். அது இஸ்லாமியரோட புனிதமான எண். அதை அமிதாப்பச்சனுக்குக் கொடுத்துருந்தாங்க. அந்தப் படத்தில் நடிக்கும்போது பலவிதமான இடையூறுகளை எல்லாம் சந்தித்தார். கூலி படத்துல ரஜினிக்கு 1421 என்ற நம்பர் போட்டுருக்காங்க.
இதைப் பற்றி சிலர் சொல்வாங்க. சைனர்கள் வந்து அமெரிக்காவைக் கண்டுபிடிச்ச வருஷம்னு. ஆனா அது ஒரு தேவதையோட அதிர்ஷ்ட எண். இந்தத் தேவதை எந்தவிதமான இடையூறுகள், பிரச்சனைகள் வந்தாலும் மனிதர்களைக் காப்பாற்றுவாள். அதுதான் ரஜினிக்கு வழங்கப்பட்ட எண். கூலி படத்துல அமிதாப்பச்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதே போல ரஜினிக்கும் ஆந்திராவில நடிக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர் சூட்டிங்கைக் கேன்சல் பண்ணிட்டு வந்துட்டாரு. அந்த எண் தான் ரஜினியைக் காப்பாற்றி இருக்குது என்ற நம்பிக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் ரஜினி ஓய்வில் தான் இருக்கிறார்.