இந்த மாசம் என்ட்ல ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்… கூலி படத்தோட கதையே அதுதான்!

coolie rajni
coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் இப்போது வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படத்திற்கான அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு இந்த மாதம் டபுள் ட்ரீட்.
படத்தின் பர்ஸ்ட் டீசரும், பர்ஸ்ட் சிங்கிளும் இந்த மாத இறுதியில் வரும். அடுத்து ஒரு டிரெய்லர் வரப் போகுது. அப்;புறம் படம் ஆகஸ்ட் 14ல ரிலீஸ். ரஜினியே கூலி படத்தின் ரஷ்ஷைப் பார்த்துட்டு பாட்ஷாவுல நான் என்ன ஃபீல் பண்ணினனோ அதை விட ஒரு ஸ்டெப் அதிகமா நான் ஃபீல் பண்ணிருக்கேன்னு சொன்னாராம்.
படத்தோட தயாரிப்பாளருக்கும் போட்டுக் காட்ட அவரும் ஹேப்பி. அடுத்து அனிருத் கைக்குப் போகிறது. அவரும் வேற லெவலுக்கு படத்தைக் கொண்டு போய்விடுவார் என்றே நம்பலாம். மொத்தத்துல கூலியோட ரேஞ்சே வேற லெவலுக்குப் போய்க்கிட்டு இருக்காம்.
சத்யராஜ், நாகர்ஜூனா, சுருதிஹாசன், உபேந்திரான்னு பல பிரபலங்கள் நடிச்சிருக்காங்க. இதுல யாரு வில்லன்னு கேட்டா எல்லாருமே வில்லன். எல்லாருமே ஹீரோதானாம். இதுல சின்ன டுவிஸ்ட் வச்சிருக்காங்களாம். இந்தப் படத்துல சுருதிஹாசன் வித்தவுட் மேக்கப்.
படத்துல ரஜினியோட பிளாஷ்பேக் 10 நிமிஷம் வருது. அதுல ஒரு சின்ன டுவிஸ்ட் வச்சிருக்காங்களாம். அதுதான் படத்தோட கதையாம். மேற்கண்ட தகவலை பிரபல சினிமா பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரஜினி படம் என்றாலே சும்மா மாஸ் காட்டும். அதிலும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் காம்போ. சன்பிக்சர்ஸ்னு வெற்றிக் கூட்டணி வேற. படம் ஆகஸ்டு 14 சுதந்திரதின ஸ்பெஷலாக வெளியாகிறது. அப்படின்னா படத்துல ஏதோ ஒரு மாஸான விஷயம் இருக்கு. வெயிட் பண்ணிப் பார்ப்போம்.