Coolie: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதிலும் சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்தது. ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் படக்குழு புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அனிருத்தும் சில பேட்டிகளை கொடுத்தார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ரஜினி பேசியதும் ஹைலைட்டாக இருந்தது.
தற்போது இன்னும் ரிலீசுக்கு ஒரு வாரமே இருப்பதால் வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் சில மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி விட்டது. கேரளாவில் இன்று காலை 6 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கியது. எனவே ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறார்கள். ஒரு பக்கம் கேரளாவில் புக் மை ஷோ மூலமாகவும் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வரை ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி அதன் மூலம் ஒரு கோடி வரை வசூல் ஆகியிருக்கிறது. நாளை கர்நாடகாவில் டிக்கெட் முன்பதிவு துவங்கவுள்ளது. அதேபோல் வெளிநாடுகளிலும் டிக்கெட் முன்பதிவு துவங்கி அங்கும் நிறைய டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது. டிக்கெட் இவ்வளவு அதிகமாக விற்பனையாவதை பார்க்கும் போது ப்ரீ புக்கிங்கில் கூலி திரைப்படம் பெரிய சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
